மேட்டூர் அணையின் நீர்மட்டம் 63வது முறையாக 100 அடியை எட்டியது!
மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 63வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது.
கர்நாடகத்தில் பருவமழை கடந்த மாதம் தொடங்கி தொடர்ந்து பெய்து வந்தது. மழை தீவிரம் அடைந்ததால் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு மீண்டும் அதிகரிக்கப்பட்டது.

இந்த தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்ததின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 83 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
குடிநீருக்காக 800 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. கடந்த 22 நாளில் மட்டும் 53 அடி அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி.
மேட்டூர் அணையின் வரலாற்றில் 63வது முறையாக நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. இதனால் மேட்டூர் அணை கடல் போல் காட்சி அளிக்கிறது. 100 அடியை மேட்டூர் அணை எட்டியதால் சேலம் மாவட்ட ஆட்சியர் மகரபூஷணம் தலைமையில் அரசு அதிகாரிகள் மலர் தூவி வழிபாடு நடத்தினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications