காவிரியில் நீர்வரத்து ஒரு லட்சம் கனஅடியை தாண்டியது!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஒரு லட்சம் கனஅடியை தாண்டியுள்ளது.
Recommended Video

சேலம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஒரு லட்சம் கனஅடியை தாண்டியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் கிடுகிடுவென நிரம்பி வருகின்றன.
இதைத்தொடர்ந்து பாதுகாப்பு கருதி கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து அதிகளவு நீர் வெளியேற்றப்படுகிறது. இரு அணைகளில் இருந்தும் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் கனஅடி
இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. நேற்று வரை 90000 கனஅடியாக இருந்த அணைக்கான நீர் வரத்து இன்று ஒரு லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

நீர்மட்டம் 95.73 அடியாக உள்ளது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 90000 கனஅடியில் இருந்து 100764 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 95 அடியை தாண்டியுள்ளது. அணையின் நீர்மட்டம் 95.73 அடியாக உள்ளது.

நீர் இருப்பு 59.44 டிஎம்சி
அணையில் நீர் இருப்பு 59.44 டிஎம்சியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக மட்டும் அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு
இதனிடையை கர்நாடகாவில் பருவமழை மேலும் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஒரு வேளை மழை மேலும் தீவிரமடைந்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications