குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ல் திறப்பு இல்லை: முதல்வர் ஜெயலலிதா
சென்னை: குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறக்கப்படமாட்டாது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணை நீர் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆண்டுதோறும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருக்கும்பட்சத்தில் பருவமழையை நம்பி ஜூன் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனப் பகுதிக்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும்.

ஜூன் 12-ந் தேதி முதல் ஜனவரி 28-ந் தேதி வரை குறுவை, சம்பா, தாளடி பயிர்கள் சாகுபடிக்காக 330 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். பாசனப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து பாசனத்துக்கான தண்ணீர் தேவை குறையும்.
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில், குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை ஜூன் 12-ந் தேதி திறந்துவிட இயலாது என்று கூறியுள்ளார்.
மேலும், மேட்டூர் அணையில் தற்போது நீர்மட்டம் 72.64 அடியாக மட்டுமே உள்ளது. கர்நாடகா காவிரியில் நீர் திறந்துவிட்டாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஜூன் இறுதியில் 79 அடிதான் இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications