தட்டு நிறைய எவ்ளோ லட்டு.. ! எம்ஜிஆர் பிறந்தநாளை அமர்க்களப்படுத்திய அதிமுக தொண்டர்கள்!!
சென்னை: அம்மா வெளியே வராவிட்டாலும், வழக்கமான உற்சாகத்தோடு எம்ஜிஆர் பிறந்த நாளை கொண்டாடினர் அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள்.
எம்ஜிஆர் என்ற பெயருக்கு அப்படி என்ன காந்த சக்தி உள்ளதோ தெரியவில்லை, அவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் அவர் மீதான கிரேஸ் குறையவில்லை. முகத்தை பார்த்த உடனே வசீகரிக்கும் ஆற்றலை கொண்டவர் எம்ஜிஆர். அவர் நடித்து வெளியான திரைப்படங்களும், முதல்வராக அவரது ஆட்சி முறையும் இணைந்து எம்ஜிஆருக்கு மலைபோன்ற ஒரு பிம்பத்தை மக்களிடம் கொடுத்துள்ளன. அதிலும் அதிமுக தொண்டர்களின் நாடி நரம்பெல்லாம் எம்ஜிஆர்தான் நிறைந்துள்ளார்.

ஜெயலலிதா மரியாதை
இன்று எம்ஜிஆரின் 98வது பிறந்த தினமாகும். சொத்துக்குவிப்பு வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியேவந்துள்ளதால் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாத நிலை. எனவே, தனது போயஸ் கார்டன் இல்லத்திலேயே, எம்ஜிஆர் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

முதல்வர் பங்கேற்பு
அதேநேரம் சென்னை, ராயப்பேட்டையில் அதிமுக தலைமையகத்தின் வெளியே அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முதல்வர் பன்னீர்செல்வமும் மரியாதை செலுத்தினார். அப்போது எம்ஜிஆர் பிறந்தநாள் சிறப்பு மலரை மதுசூதனன் வெளியிட, தொழில்துறை அமைச்சர் தங்கமணி அதை பெற்றுக் கொண்டார்.

தட்டு நிறைய எவ்ளோ லட்டு
எம்ஜிஆர் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக அதிமுக நிர்வாகிகள் லட்டுகளுடன் தலைமை அலுவலகத்தில் குவிந்தனர்.

மகளிரணி
ஆண்களும் பெண்களுமாக நூற்றுக்கணக்கான தொண்டர்கள் தலைமை அலுவலகம் எதிரே குவிந்ததால் அந்த இடமே விழாக்கோலம் பூண்டது.

குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால..
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவப் படம் பொறித்த பெரிய மோதிரங்களுடன் வந்திருந்த ஆஜானபாகு தொண்டர் கவனத்தை ஈர்த்தார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications