எம்ஜிஆர் பிறந்த கண்டியில் பிரமாண்டமாக நடக்கிறது நூற்றாண்டு விழா.. இலங்கை அமைச்சர் பேட்டி
சென்னை: இலங்கையில் எம்ஜிஆர் பிறந்த ஊரான கண்டியில், அவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. வரும் 16ம் தேதி நடைபெற உள்ள இந்த விழாவிற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதில் தமிழகத்தில் இருந்து பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

ஆசியாவின் 2வது மிகப்பெரிய நூலகமான புகழ்பெற்ற யாழ்ப்பாணம் நூலகத்திற்கு, அவர்கள் தமிழக அரசு சார்பில், சுமார் 1 லட்சம் புத்தகத்தை வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எம்ஜிஆர் விழா குறித்து சென்னையில் இன்று இலங்கை அமைச்சர் வேலுச்சாமி ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இலங்கையில் தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படுவதற்கான சூழல் உருவாகிவருகிறது. இலங்கையில் புதிய அரசு பொறுப்பேற்றது முதல் தமிழர்களின் நிலங்கள், பள்ளிகள் உள்ளிட்டவை கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள அகதிகள் மீண்டும் இலங்கையில் குடியேறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இலங்கை மற்றும் தமிழகம் நடுவே நீண்ட காலமாக நல்ல உறவு இருந்து வந்தது.
இலங்கை-தமிழகம் இடையே மீண்டும் நல்லுறவை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக, எம்ஜிஆர் விழா கொண்டாடப்பட உள்ளது. இவ்வாறு இலங்கை அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications