எம்.ஜி.ஆர் ஆட்சியில் தான் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன- துரைமுருகன்
சென்னை: திமுக ஆட்சியில் மூடப்பட்ட மதுக்கடைகள் எம்.ஜி.ஆர் ஆட்சியில் தான் மீண்டும் திறக்கப்பட்டன என்று எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் தான் சாராய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மதுவிலக்கை ரத்து செய்தது யார் என்று சட்டசபையில் அமைச்சர் தங்கமணி பேசியதற்கு தி.மு.க உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மதுக்கடைகளை மூடுவது குறித்து சட்டமன்றத்தில் சுமார் 15 நிமிடங்கள் கூச்சல், குழப்பம் நிலவியது.
மதுவிலக்கை உண்மையாக அமல்படுத்துவதில் அ.தி.மு.க. தான் அதிக அக்கறை கொண்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். 1971ல் பூரண மதுவிலக்கு அமலில் இருந்தபோது அப்போதைய முதல்வர் கருணாநிதி மதுவிலக்கை தளர்த்தினார். 2007ல் அவர் முதல்வராக இருந்தபோது, கள்ளச்சாராயத்தை அறவே ஒழிக்க முடியாது என்று ஜெயலலிதா கூறினார்.

திமுகவினர் வெளிநடப்பு
மதுவிலக்கு விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா பேச்சுக்கு பதில் தர தி.மு.கவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து சபாநாயகரை கண்டித்து தி.மு.க உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

துரைமுருகன் குற்றச்சாட்டு
வெளிநடப்பிற்கு பின் சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், மதுவிலக்கை கொண்டு வந்தது யார் என மக்களுக்கு தெரியும் என்றார். எதிர்கட்சிகளை பேசவிடாமல் சகட்டுமேனிக்கு குற்றசாட்டுகளை கூறுகிறது அ.தி.மு.க என்று கூறினார்.

சாராய சாம்ராஜ்யம்
மேலும் பேசிய அவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் தான் சாராய சாம்ராஜ்யத்தை உருவாக்கியதாக குற்றம்சாட்டினார். திமுக ஆட்சியில் மூடப்பட்ட மதுக்கடைகள் எம்.ஜி.ஆர் ஆட்சியில் தான் மீண்டும் திறக்கப்பட்டதாக கூறினார்.

ஜெயலலிதாவுக்கு சவால்
மேலும் பேசிய அவர் மதுவிலக்கு பற்றி ஒரு நாள் முழுவதும் பேச திமுக தயாராக உள்ளதாகவும், எங்களை பேச அனுமதிக்க முதல்வர் ஜெயலலிதாவுக்கு தைரியம் இருக்கிறதா என்றும் சவால் விடுத்தார்.

அரசு நடத்தும் மதுக்கடைகள்
ஆளுங்கட்சியினர் சட்டசபையில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கப் பார்ப்பதாக குற்றம்சாட்டியுள்ள துரைமுருகன், அரசே மதுக்கடையை ஏற்று நடத்த துவங்கியது ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் தான் என சுட்டிக்காட்டினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications