தமிழகத்தில் தேர்தலை நடத்த விரும்பும் ஒரே நபர் மு.க.ஸ்டாலின் மட்டும்தான்: அமைச்சர் ஜெயக்குமார் சாடல்
தமிழகத்தில் மீண்டும் பொது தேர்தல் நடத்த வேண்டும் என்று நினைக்கும் ஒருவர் என்றால் அது முக ஸ்டாலின்தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் மீண்டும் பொது தேர்தல் நடத்த வேண்டும் என்று நினைக்கும் ஒரே நபர் திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின்தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.
பெரும்பான்மையை இழந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று முக ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

Recommended Video

பாஜக எட்டா கனிக்கு கொட்டாவி விடுகிறது-ஸ்டாலின்-வீடியோ
இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் தேர்தல் வர வேண்டும் என நினைக்கும் ஒருவர் என்றால் அது மு.க. ஸ்டாலின்தான்.
பொது தேர்தல் வர வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்பவில்லை. அதேவேளையில் தேர்தலை கண்டும் அஞ்சும் இயக்கம் அதிமுக இல்லை.
உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைப்பதால் எங்களுக்கு எந்த வித உள்நோக்கமும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications