கமல் அரசியல் பிரவேச கருத்து பற்றி அமைச்சர் ஜெயக்குமார் சொன்னது என்ன தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பரமசிவன் கழுத்திலிருந்து விழுந்த தீண்டத்தகாத பாம்பு சசிகலா என்று விமர்சித்த ஜெயக்குமார் கமலையும், டிடிவி தினகரனையும் விமர்சித்துள்ளார்.

அதிமுகவில் தற்போது மோதல் வலுத்து வருகிறது. இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்று டிடிவி தினகரன் கூறியது குறித்து எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில் நாங்கள் வெளியே வந்தால் பிறகு வீட்டுக்குதான் செல்வோம். ஆனால் எங்களை வீட்டுக்கு அனுப்புவோம் என்று கூறும் டிடிவி தினகரன் விரைவில் மாமியார் வீட்டுக்கு செல்லவுள்ளார் என்றார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சென்னை அடையாறில் தனது வீட்டில் செய்தியாளர்களுக்கு டிடிவி தினகரன் பேட்டி அளிக்கையில், எடப்பாடி பழனிசாமி விரைவில் சிறைக்கு செல்வார். ஆட்சியில் இருக்கும் பலர் சிறைக்கு செல்வது உறுதி, அந்த பயத்தில் தான் என்னை சிறைக்கு அனுப்ப நினைக்கின்றனர்.

 தப்ப முடியாது

தப்ப முடியாது

என்னை சிறைக்கு அனுப்பினால் தப்பித்து விடலாம் என்று ஆட்சியாளர்கள் நினைக்கின்றனர் என்று கூறியுள்ளார். நான் அரசாங்க பணத்தை கையாடல் செய்தோ, ஊடல் செய்தோ, பொதுமக்கள் பணத்தை கொள்ளையடித்தோ சிறைக்கு செல்லவில்லை.

 துரோகம் செய்தார்

துரோகம் செய்தார்

தன்னை முதல்வராக்கிய சசிகலாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்கிறார் என்று டி.டி.வி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ஜெயலலிதா மரணத்தை சிபிஐ விசாரித்தால் முதலில் திண்டுக்கல் சீனிவாசன்தான் சிறைக்கு செல்வார் என்றார் டிடிவி தினகரன்.

  ரஜினியை அரசியல் கூட்டணிக்கு அழைக்கும் கமல் | Oneindia Tamil
   தினகரனுக்கு பதிலடி

  தினகரனுக்கு பதிலடி

  எடப்பாடிக்கும் தினகரனுக்கும் மோதல் உச்சம் அடைந்து வரும் நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: பரமசிவன் கழுத்தில் இருந்து விழுந்த தீண்டத்தகாத பாம்பு சசிகலா. எடப்பாடி சிறை செல்வார் என்று டிடிவி தினகரன் கூறுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.

   தெளிவில்லாத கமல்

  தெளிவில்லாத கமல்

  மன்னார்குடி மாபியா கும்பல் 21 பவர் சென்டர்கள் மூலம் தமிழகத்தை ஆட்டி படைத்து வந்தனர். தான் பேசும் கருத்தில் தெளிவில்லாதவராக உள்ளார் நடிகர் கமல்ஹாசன் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Minister Jayakumar says that Sasikala is an untouchable snake which fall from Paramsivan's neck. He also criticises TTV Dinakaran.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற