For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேசி பழனிச்சாமி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

கேசி பழனிச்சாமி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கே.சி. பழனிசாமி நீக்கப்பட்டது பற்றி ஜெயக்குமார் விளக்கம் -வீடியோ

    சென்னை: கேசி பழனிச்சாமி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.

    அதிமுக முன்னாள் எம்பியும் செய்தி தொடர்பாளருமான கேசி பழனிச்சாமி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் பாஜகவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கும் என தெரிவித்திருந்தார்.

    கேசி பழனிச்சாமியின் இந்த பேச்சு கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவரை நீக்கி கட்சித் தலைமை உத்தரவிட்டது.

    அமைச்சர் விளக்கம்

    அமைச்சர் விளக்கம்

    இந்நிலையில் அவரை நீக்கியது ஏன் என்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார். கொள்கை முடிவு குறித்து பேசியதால் கேசி பழனிச்சாமி நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    தனிநபர்

    தனிநபர்

    நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பதா என்பதை கட்சிதான் முடிவெடுக்கவேண்டும் என்றும் அவர் கூறினார். கொள்கை முடிவை தனி நபர் எடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

    அமைச்சர் மறுப்பு

    அமைச்சர் மறுப்பு

    கேசி பழனிச்சாமியின் பேச்சில் உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது என்றும் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.
    பாஜக நிர்பந்தத்தால் கேசி பழனிச்சாமி நீக்கப்பட்டதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.

    முடிச்சுப்போடக்கூடாது

    முடிச்சுப்போடக்கூடாது

    மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் காவிரி விவகாரத்தையும் நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் முடிச்சுப்போடக்கூடாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    English summary
    Minister Jayakumar explains why KC Palanisami expelled from the party. He also said Individuals can not talk about party policy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X