For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீயும் பொம்மை, நானும் பொம்மை, நினைச்சி பார்த்தா எல்லாம் பொம்மை.. சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: "நீயும் பொம்மை, நானும் பொம்மை நினைச்சி பார்த்தா எல்லாம் பொம்மை" என்று பொம்மை தின வாழ்த்துக்கள் தெரிவித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.

சென்னையில் இன்று பேட்டியளித்த, அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: நேற்று உலக கடல் தினம். உலகின் முதல் உயிரினம் அமீபா, தோன்றியது கடலில்தான்.

Minister Jayakumar extend greetings for World toy day

மாசுகட்டுப்பாட்டு வாரியம், கடல் மாசுவை குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மக்களிடமும் விழிப்புணர்வு தேவை. அதற்காக மாணவர்களுக்கு கடல் தினத்தையொட்டி பல போட்டிகளை நடத்தி வருகிறோம். சுவாசிக்கும் ஆக்சிஜனில் 80 சதவீதம் கடல்தான் கொடுக்கிறது. இது பலருக்கும் தெரியாது.

இன்று உலக பொம்மைகள் தினம். "நீயும் பொம்மை, நானும் பொம்மை நினைச்சி பார்த்தா எல்லாம் பொம்மை" என்று, கவிஞர் பாடியுள்ளார். இதையே வாழ்த்துக்களாக தெரிவித்துக்கொள்கிறேன். வெறும் பொம்மைகளாக இல்லாமல், சமூகத்தின் படைப்பாளிகளாக இருக்க வேண்டும் என்பதை வாழ்த்தாக கூறிக்கொள்கிறேன். இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது தவறான தகவல் என்று, ஜெயக்குமார் தெரிவித்தார்.

'உலக பொம்மை தினம்' ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 2வது சனிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.

English summary
June 2 week of every year celebrated as world toy day, Minister Jayakumar extend greetings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X