காவிரி மேலாண்மை வாரியம்.. அவசரம் ஏன்? இன்னும் 3 நாட்கள் இருக்கிறதே- ஜெயக்குமார் பேட்டி
தமிழக ஜீவாதார உரிமைக்காக 17 ஆண்டுகளில் திமுக போராடியது உண்டா என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video

சென்னை: தமிழக ஜீவாதார உரிமைக்காக 17 ஆண்டுகளில் திமுக போராடியது இல்லை. நேரத்திற்கு ஏற்ப பச்சோந்தி போன்று மாறிக் கொள்வார்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
காவிரி நதி நீரை பங்கீடு செய்ய ஒழுங்குமுறை குழுவை 6 வாரங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கெடு விதித்தது. அந்த கெடு வரும் 29-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
எனினும் இதுவரை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த எவ்வித நடவடிக்கையையும் மத்திய அரசு செய்தது போல் தெரியவில்லை. இதனால் தமிழகத்தில் உள்ள விவசாயிகள், அரசியல் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடவடிக்கை இல்லை
இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் காவிரிக்காக எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லையே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

17 ஆண்டுகள்
அப்போது அவர் கூறுகையில் காவிரி நீருக்காக அதிக முறை போராடிய இயக்கம் அதிமுகதான். எங்களை காட்டிலும் 17 ஆண்டுகளாக மத்திய அரசுடன் கூட இருந்தவர்கள் திமுகவினர். அப்படியிருந்தபோது தமிழக ஜீவாதார உரிமைக்காக 17 ஆண்டுகளில் திமுக போராடியது உண்டா?

3 நாட்கள் அவகாசம்
திமுகவை பொறுத்தவரை நேரத்திற்கு ஏற்ப பச்சோந்தி போன்று மாறிக்கொள்வார்கள்.
காவிரி வாரியம் அமைக்க 3 நாட்கள் அவகாசம் இருக்கும் நிலையில் பொறுத்திருந்து பார்ப்போம். ஒரு நாள் இரவிலும் கூட என்னவேண்டுமானாலும் நடக்கலாம்.

திட்டவட்டமாக
உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானங்களை நிறைவேற்றி அதை நீர்வளத் துறை அமைச்சகத்திடம் காவிரி மேலாண்மை வாரியத்தை தவிர வேற எதையும் ஏற்கமாட்டோம் என்று சொல்லவிட்டோம். இன்னும் 3 நாட்கள் இருக்கிறது பார்ப்போம்.

எங்கள் குறிக்கோள்
அதிமுக எம்பிக்கள் கடந்த 15 நாட்களாக காவிரிக்காக நாடாளுமன்றத்தில் போராடி வருகின்றனர். ஆனால் திமுக காவிரிக்காக நாடாளுமன்றத்தில் போராடியதில்லை. காவிரி உரிமையை ஜெ. வழியில் நிலைநாட்டுவதே எங்கள் குறிக்கோள் என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ











Click it and Unblock the Notifications