ஜெயிலுக்கு போய் வந்தோர் பட்டியலில் நிச்சயம் எச் ராஜாவும் இருப்பார்- அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: ஜெயிலுக்கு போய் வந்தோர் பட்டியலில் நிச்சயம் எச் ராஜாவும் இருப்பார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
கருணாஸை மட்டும் கைது செய்த நிலையில் எச் ராஜாவை இன்னும் கைது செய்யாதது ஏன் என்று செய்தியாளர்கள் கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.
அப்போது அவர் கூறுகையில் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் மதக்கலவரத்தை உருவாக்க வேண்டும், மொழிபிரச்சினையை கொண்டு மக்களை பிரித்தாள வேண்டும் என்ற நினைப்பில் உள்ளவர்களுக்கு எல்லாம் மாமியார் வீடு ஜெயில்தான்.

எச் ராஜாவாக இருந்தாலும்
ஒருவர் பின் ஒருவராக போவர். நீங்கள் யாரையெல்லாம் நினைக்கிறீர்களோ அவர்களுக்கு எல்லாம் இது நடக்கும். எச் ராஜாவாக இருந்தாலும் கருணாஸாக இருந்தாலும் எல்லை உள்ளது.

விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும்...
கடுமையான வழக்குகள் போடப்பட்டுள்ள நிலையில் எச் ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஜெயிலுக்கு போய் வந்தோர் பட்டியலில் ராஜாவும் இருப்பார். பிரச்சினை விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர்.

போராட்டம்
குற்றத்துடைய ஆழம் என்ன என்பதை பார்க்க வேண்டும். பிற சமூகத்தினர் கருணாஸை கைது செய்ய வேண்டும் என்று போராட்டம் செய்ய ஆரம்பித்து விட்டனர். அதனால் அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

புது விஷயம்
அடிமை அரசியலை முழுமையாக செய்ய கூடியவர் டிடிவி தினகரன்தான். எங்களுடையது சுதந்திர அரசியல். எதை சொன்னால் எடுபடும் என்று பார்க்கிறார்கள். எதுவும் எடுபடவில்லை. தினகரன் சொல்வது எல்லாம் புளிச்சு போன ஒன்று. புது விஷயம் இருந்தால் சொல்ல சொல்லுங்கள்.

நூற்றாண்டு விழா
31 மாவட்டங்களில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. 32-ஆவது மாவட்டமாக சென்னையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ஸ்டாலின், டிடிவி தினகரன் ஆகியோரை அழைப்பது அரசு விழா, இதில் மரபை பின்பற்றியுள்ளோம். சென்னையை சேர்ந்த எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். இதே ஸ்டாலினும், தினகரனும் வேறு மாவட்டங்களில் எம்எல்ஏவாக இருந்திருந்தால் அவர்களை அழைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார் ஜெயக்குமார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications