காவிரி மேலாண்மை வாரியம்: எள்ளளவும் பின்வாங்க மாட்டோம்- ஜெயக்குமார்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதில் எள்ளளவும் பின் வாங்க மாட்டோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதில் எள்ளளவும் பின் வாங்க மாட்டோம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை அமைந்தகரையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் காவிரி விவகாரத்தில் அதிகளவில் அழுத்தம் கொடுத்தது அதிமுக மட்டும்தான். எனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதில் எள்ளளவும் பின்வாங்க மாட்டோம்.

29-ஆம் தேதிக்கு பிறகு
அவர்கள் சொன்னார்கள் , இவர்கள் சொன்னார்கள் என்பதற்கு பதில் சொல்லும் நேரம் இதுவல்ல. மேலாண்மை வாரிய விவகாரத்தில் 29-ஆம் தேதிக்கு பிறகுதான் கருத்து கூற முடியும்.

வைகோ புரிந்து கொள்ள
காவிரி விவகாரத்தில் விளம்பரத்துக்காக தினகரன் உண்ணாவிரதம் இருக்கிறார். ஆதி திராவிட மக்களுக்கு வீட்டு வசதியை உருவாக்க உள்ளதை வைகோ புரிந்து கொள்ள வேண்டும்.

நான்தான் உள்ளேன்
ஆதி திராவிட மக்களுக்கு எதிரான வேலையை வைகோ ஏன் செய்கிறார் என தெரியவில்லை. வீட்டு வசதி கோரும் ஆதி திராவிட மக்களின் பின்னால் நான்தான் உள்ளேன்.

மாயதோற்றம்
மூலக்கொத்தளம் பகுதியில் ஒரு உடல் கூட அடக்கம் செய்யப்படவில்லை. மூலக்கொத்தளம் நினைவுச் சின்னங்களை அழிப்பதாக மாய தோற்றத்தை உருவாக்குகின்றனர் என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications