பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை.. அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை!
பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வாய் பேச முடியாத காது கேளாத சிறுமி 15 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 7 மாதங்களாக மயக்க ஊசி போட்டும் போதை ஊசி போட்டும் சிறுமிக்கு இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
இந்நிலையில் சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அரசு நடவடிக்கை
அப்போது பாலியல் வன்கொடுமை புகாரில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

துணிச்சலுடன் புகார்
குறிப்பாக குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல் குற்றங்களை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும் அவர் கூறினார். பாலியல் கொடுமைகள் நடந்தால் துணிச்சலுடன் புகார் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மாற்றி மாற்றி பேசுகிறார்
மேலம் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குகுமார் முட்டை கொள்முதல் விவகாரத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் மாற்றி மாற்றி பேசுகிறார் என்றார். முதலில் ஊழல் நடைபெற்றுள்ளது என்ற அவர் பின்னர் நான் அப்படி கூறவே இல்லை என்கிறார் என்றும் கூறினார்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள்
ஆண்டுக்கு ரூ.1000 கோடிக்கு முட்டை கொள்முதல் செய்தால் ரூ. 5000 கோடிக்கு எப்படி முறைகேடு நடக்கும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை பொன் ராதாகிருஷ்ணன் முன்வைக்கக் கூடாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications