For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சினிமா டிக்கெட் விலை உயர்த்தப்பட்டதால் கேளிக்கை வரி ரத்து இல்லை : அமைச்சர் திட்டவட்டம்!

சினிமா டிக்கெட்டுகளுக்கான விலை உயர்த்தப்பட்ட நிலையில் கேளிக்கை வரியை ரத்து செய்யும் திட்டம் எதுவுமில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை: சினிமா டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதால் கேளிக்கை வரியை ரத்து செய்யும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சினிமா டிக்கெட்டுகளுக்கான விலையை 25 சதவீதம் அதிகரித்து கடந்த சனிக்கிழமை அரசு அதிரடியான உத்தரவை பிறப்பித்தது. எனினும் 25 சதவீத கட்டணம் உயர்வு போதாது என்றும், சினிமா டிக்கெட்டிற்கு மாநில அரசு விதித்த கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று திரைத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Minister Kadambur raju says no relaxation of entertainment tax

Recommended Video

    சினிமா டிக்கெட் விலை உயர்வு போதாதாம்-வீடியோ

    இன்று முதல் புதிய விலை உயர்வு அமலுக்கு வருவதாக அரசு அறிவித்த நிலையில், கட்டண உயர்வு போதாது என்று புதிய விலையை வசூலிக்காமல் உள்ளன திரையரங்குகள். கேளிக்கை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி முதல்வரை சந்தித்து வலியுறுத்த திரைத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில் மத்திய அமைச்சர் கடம்பூர் ராஜூ கேளிக்கை வரியை தற்போதைக்கு குறைக்கவோ ரத்து செய்யவோ எந்த எண்ணமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

    சினிமா டிக்கெட்டின் விலை உயர்ந்துள்ள நிலையில் கேளிக்கை வரியால் திரைத்துறைக்கு எந்த பாதிப்பும் இல்லை. டிக்கெட் கட்டணம் தொடர்பாக திரைத்துறையினர் பேச்சுவார்த்தைக்கு வந்தால் பரிசீலிக்க அரசு தயாராக இருக்கிறது.

    நடிகர் சிவாஜிகணேசனுக்கு புதிய பீடம் அமைக்கப்பட்டதால் அதில் இருந்து முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் நீக்கப்பட்டது.

    ஜெயலலிதா சிவாஜி குறித்து புகழ்ந்து கூறிய வாசகங்கள் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

    English summary
    Tamilnadu government says that there is no withdrawal of 10 Percentage of entertainment tax on Cinema tickets
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X