ரூ.1000 உரிமைத் தொகை! நாங்கள் படுற பாடு இருக்கே! தப்பி பிழைச்சால் போதும்னு இருக்கு! அமைச்சர் சர்ச்சை
தென்காசி: மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்து கிடைக்காதவர்கள் படுத்தும்பாடு இருக்கே அப்பப்பா சொல்லி மாளாது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களிடம் இருந்து தப்பி போனால் போதும் என்ற நிலையே ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சங்கரநாராயணன் கோயில் தேரோட்ட திருவிழா நடந்தது. இந்த விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் சுவாமி தரிசனம் செய்த அவர் பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசு தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் விழாவும் நடந்தது.
இந்த விழாவில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் நீங்கள் எதிர்பார்ப்பதை நீங்கள் சொல்லாமலேயே நாங்கள் செய்து வருகிறோம். தமிழக அரசிடம் பணம் இல்லை. ஆனாலும் மகளிர் உரிமைத் தொகையாக ரூ 1000 கொடுத்துவிட்டு நாங்கள் படாதபடுபடுகிறோம்.
தமிழகத்தை பொருத்தமட்டில் 1.15 லட்சம் கோடி மகளிருக்கு ரூ 1000 வழங்கி வருகிறோம். அந்த பணத்தை பெற்றுக் கொள்ளும் பெண்கள் வாய் திறப்பதே இல்லை. ஆனால் அந்த உதவித் தொகை கிடைக்காத ஒரு சில பெண்கள் நாங்கள் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு விழாக்களுக்கு சென்றால் எங்களை படுத்தும் பாட்டில் இருந்து தப்பித்து ஓடி வருவதே பெரும் பாடாக உள்ளது.
கிராமப்புற பெண்கள் அட்வான்ஸ்டாக உள்ளனர். தங்களுக்கு வழங்கப்படாத அரியர் தொகையையும் சேர்த்து வழங்க வேண்டும் என கூறுகின்றனர் என பேசியுள்ளார். மகளிர் உரிமைத் தொகையை பெண்கள் தங்கள் தாய்வீட்டு சீதனமாக நினைத்து வருகிறார்கள்.
மேலும் மாதாமாதம் ரூ 1000 பணத்தை தங்கள் அண்ணன் முதல்வர் ஸ்டாலின் கொடுப்பதாகவே பார்க்கிறோம் என கூறி வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் சர்ச்சைக்குரிய வகையில் பெண்களுக்கு கொடுக்கப்படும் பணத்தை இம்சையாக கருதுவதாகவே பெண்கள் வேதனை அடைகிறார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் ரூ 1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த மகளிர் உரிமைத் தொகை செயல்படுத்தப்படவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தனர். ஒரு கோடி பெண்களுக்கு வழங்குவதற்காக பொருளாதார தகுதிகள் வரையறுக்கப்பட்டது.
முதலில் ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது. அடுத்தடுத்த மாதங்களில் பயனாளர்கள் அதிகரித்து சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பேராக இணைந்தனர். கடந்த ஜூலை 15 ஆம் தேதி மேலும் 1.48 லட்சம் பேருக்கு இந்த ரூ 1000 திட்டம் வழங்கப்பட்டது. தமிழகத்தில் 2.24 கோடி குடும்ப அட்டைகளில் 1.17 கோடி பேருக்கு மட்டுமே இந்த ரூ 1000 உரிமை தொகை கிடைத்துள்ளதால் மற்றவர்கள் கொந்தளித்துள்ளனர்.
லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோரிடம் பெண்கள் உரிமைத் தொகை கேட்டனர். அது போல் அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோரிடமும் கேட்டனர். கனிமொழியிடம் இன்னும் ஒரு படி மேலே போய் ஆண்கள் உரிமைத் தொகை வேண்டும் என அங்கிருந்த இளைஞர்கள் கேட்டனர்.
இந்த ரூ 1000 உரிமைத்தொகை தங்கள் குழந்தைகளுக்கு டியூஷன் ஃபீஸ் கட்டுவதற்கும் தின்பண்டங்கள் வாங்கி கொடுக்கவும் பால் கடனை கொடுக்கவும், மளிகை சாமான், காய்கறிகளை வாங்கவும் உதவியாக இருப்பதாக பல பெண்கள் முதல்வர் ஸ்டாலினிடமே பூரித்து போய் சொல்லியிருக்கிறார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications