அச்சம் வேண்டாம் மக்களே.. மழையை சமாளித்த அனுபவம் உள்ளது: அமைச்சர் சம்பத்

Subscribe to Oneindia Tamil

கடலூர் : கடலூர் மாவட்டத்தில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆய்வு செய்தார்.

கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எம்.சி.சம்பத் ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட ஆட்சியருடன் அடுத்தகட்ட பணிகள் குறித்து ஆலோசனை செய்தார்.

Minister MC Sampath inspects Cuddalore monsoon rain precautionary measures

அதன் பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமைச்சர், கேள்விகளுக்கு பதிலளிதார். கடலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக இதுவரை மூன்று பேர் பலியாகி இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து கணக்கெடுப்புக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், மாவட்ட நிர்வாகம் சிறப்பான நடவடிக்கை எடுத்து இருப்பதாகவும், இதுவரை நிலமை கட்டுக்குள் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் போல இந்த ஆண்டு பாதிப்பு இருக்குமா என்கிற கேள்விக்கு, 2015 டிசம்பர் மழை நமக்கு தலைசிறந்த அனுபவத்தை அளித்துச் சென்றிருக்கிறது. இந்த ஆண்டு அப்படி இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பதிலளித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister MC Sampath inspects Cuddalore monsoon rain precautionary measures and had a Meeting with District collector.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற