அடுத்தும் எங்க ஆட்சிதான்... லஞ்சம் வாங்கிய அமைச்சர் பிஏவின் தில் பேச்சு: வாட்ஸ் அப் ஆடியோ பார்ட் 2
சென்னை: தமிழக போக்குவரத்துக்கழகத்தில் கண்டக்டர், டிரைவர் பணியிடங்களை நிரப்ப ஆளும் கட்சியினர் லஞ்சம் வாங்குவதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. இதற்கு ஆதாரமாக அமைச்சர் ஒருவரின் பிஏவிடம் ஏஜென்ட் ஆக செயல்படும் போலீஸ்காரர் மகேஷ் என்பவர் லஞ்ச பண விவகாரம் தொடர்பாக பேசிய ஆடியோ நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று உளுந்தூர்பேட்டை எலவானசூர்கோட்டை அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த போலீஸ்காரர் மகேஷ், சிகிச்சை பெற்று வருகிறார்.
இது விபத்தா அல்லது கொலை முயற்சியா என்ற சந்தேகம் இருந்துவரும் நிலையில் அமைச்சரின் பிஏ, மகேஷிடம் பேசிய இரண்டாவது ஆடியோ இன்று வாட்ஸ்அப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது ஆளும் கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று வெளியான வாட்ஸ் அப் உரையாடல் விபரம்:
பிஏ: வணக்கம், அக்கவுண்ட் நம்பர் வந்திருச்சு..
மகேஷ்: வந்துவிட்டதா? சரிங்க சார்.
பிஏ: மாவட்டம் முழுவதும் போஸ்டிங்... போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அவரின் பிஏ வந்து அமவுண்ட் ரெடி செய்வார், வாங்கியவுடன் 10ம் தேதி அல்லது 15ம் தேதி அமவுண்ட வந்துவிடும்.
மகேஷ்: அவ்வளவு நாள் ஆகுமா? கொடுத்தவன் என்ன கேக்குறான் சார்.. இருக்கிற அமவுண்டையாவது இப்போ போட்டுவிடுங்கள்.
பிஏ: பணம் அவங்க கொடுத்தாதான் போடமுடியும். என்னிடம் பணம் எதுவும் இல்லை. நீங்க கேட்டவுடன் போட்டுவிடலாம் இருப்பினும், மாவட்ட செயலாளர், நகர செயலாளர் பதவிகளை போட்டுக்கொண்டு இருப்பதால் தாமதமாகிறது.
மகேஷ்: தினமும் பஸ் ஏறி வந்து, அவன் என்னை கேட்கிறான் சார். ஏதாவது பார்த்து செய்யுங்க என ராஜாவிடமும் சொல்லிவிட்டேன். ஆனால் விடாமல் கேட்கிறான்.
பிஏ: முதலில் பணம் தருகிறேன் என்று கூறியவர், தற்போது 15ம் தேதிதான் தர முடியும் எனக்கூறுகிறார். யாருக்கும் இது மாதிரி திரும்ப கொடுத்தது இல்லை. இப்ப அமவுண்ட் உங்களுக்கு மட்டும் கொடுக்கலாம் என நினைக்கிறார். அவனிடம் இது தொடர்பாக எதுவும் சொல்ல வேண்டாம். உங்க அக்கவுண்ட் நம்பர் வந்துவிட்டது. அவர் பணம் கொடுத்தவுடன் போட்டுவிடுகிறேன். 15ம் தேதி பணம் உன் கைக்கு வந்துவிடும்.
மகேஷ்: பணம் கொடுத்தவனிடம் சொல்லி என்னால் சமாளிக்க முடியவில்லை.
பிஏ: அவனிடம் நீ சொல்லு, வேலைன்னா சும்மா இல்லை தம்பி 78 பேரு பணத்தை கொடுத்து காத்துக்கொண்டிருக்கிறான். இதுல 52 பேருக்குதான் போஸ்டிங் போட்டிருக்கிறார்கள். இதில் உனக்கு மட்டும்தான் அமவுண்ட் வரப்போகுவது. ஏன்ன பிரச்னை ஏதும் வந்துவிடக்கூடாது, அவன் போலீசுக்கு போவேன் என்ற டார்ச்சரால்தான் பணம் தர வேண்டிய நிலை. மேலும் வரிசை படி உங்க நம்பரை கடைசியாகத்தான் கொடுத்திருக்கிறீங்க. அதனால் முன்கூட்டியே கிடைக்கவில்லை. இல்லையெனில் உங்களுக்கும் போட்டிருப்பார்கள்.
இன்னொரு விஷயம் பணத்தை கேட்டவுடன் அவர் ஒரு மாதிரி ஆகிவிட்டார். உடனே பணத்தை கொடுத்துடுப்பா? என்று கூறிவிட்டார்.
மகேஷ்: அவன் சும்மா... சும்மா... எங்க வீட்டில் வந்து நிக்கிறான். பணம் கொடுத்து மூன்று மாதாம் ஆகிவிட்டது. வேலை வரவில்லை. என பணத்தை திரும்பதா? என்கிறான். போன மாதத்திலிருந்து பணம் கேட்டு தொடர்ந்து நச்சரிக்கிறான். 1ம் தேதி, 5ம் தேதி என ஒரு மாதம் எப்படியே கடத்திவிட்டேன்.
பிஏ: இந்த முறை கண்டிப்பாக 15ம் தேதி உன்கைக்கு பணம் வரும்.
மகேஷ்: முழு பணத்தையும் என் அக்கவுண்டில் போட்டுவிட்றீங்களா?
பிஏ: உனக்கு ஃபுல் அமவுண்ட் போட்டுவிட்றேன். அவன் அக்கவுண்ட் நம்பர் கொடுத்தான். யாரிடம் பணம் வாங்கினோமோ அவர்கள் அக்கவுண்ட்டில் போட்டுவிடுகிறோம் எனக்கூறிவிட்டேன். அவன் அக்கவுண்ட்டில் போட்டால் வம்பு வந்து சேர்ந்துவிடும். பணம் 15ம் தேதிக்கு கைக்கு வந்தவுடன், 16ம் தேதி நீ எடுத்து கொடுத்துவிடலாம்.
மகேஷ்: முடிந்தால் சீக்கிரம் ரெடி செய்து கொடுத்துவிடுங்கள் சார்..
பிஏ: கடைசி நம்பர் 19தானே உங்க அக்கவுண்ட் நம்பர்,
மகேஷ்: எஸ்பிஐ விழுப்புரம் பிரான்ஞ்சில் போடுங்கள்.
பிஏ: ஓகே, ஓகே அந்த பையனிடம் பேசிவிடுங்கள்.... லீக் அவுட் ஆகிவிட்டால் பெரிய பிரச்னை ஆகிவிடும். 52 பேருக்கு போட்டுவிட்டோம். அவன் வெயிட்டிங்கில் இருக்கிறான். அவன் பணத்தை கேட்டு குதிப்பதால், பணத்தை கொடுத்துவிடுங்கள் எனக் கூறுகிறார். எனக்கே மூஞ்சியில் அடித்த மாதிரி ஆகிவிட்டது.
மகேஷ்; அவன் இங்கே வந்து கேட்டுக்கொண்டிருக்கிறான். மாறி, மாறி ஆள் விட்டு கேட்கிறார். இது வேலைக்கு ஆவது போல தெரியவில்லை. பணத்தை கொடுத்துவிடலாம்.
பிஏ: அடுத்தது நம்ம ஆட்சிதான் வரப்போகுவது.. அடுத்த தடவையும் நம்ம கிட்டதான் கெஞ்சனும்..
மகேஷ்: அடுத்த முறை யார்கிட்டயாவது.. போயி முட்டிக்கட்டும் இனி நான் தலையிடப்போவதில்லை. கொடுத்தவங்களுக்கு பொறுமை இருக்கனும். ஏன்டா இதில் தலையிட்டோம் என்றிருக்கிறது என்று அந்த ஆடியோவில் உள்ளது.
ஏற்கனவே இதுபோன்ற சிக்கலில் வேளாண்மைத்துறை அதிகாரி முத்துகுமாரசாமி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தனது பதவியை இழந்தார். இந்நிலையில் தற்போது அமைச்சர் உதவியாளர் ஒருவரிடம் வேலைக்கு லஞ்சம் கொடுத்த ஆடியோ வெளியான நிலையில் அதற்கு காரணமான போலீஸ்காரர் மகேஷ் விபத்தில் சிக்கியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications