து.பொ.செ. தினகரனை சந்திப்பதில் என்ன தப்பு...அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பொளேர்!
கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தான் அவரை சந்திப்பதில் என்ன தவறு என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : எம்எல்ஏக்கள் பலர் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான அவரை சந்திப்பதில் எந்தத் தவறும் இல்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் அடிதடி களேபரங்கள் கடந்த சில நாட்களாக ஓய்ந்திருந்த நிலையில் டிடிவி தினகரன் சிறையில் இருந்து வெளியானது முதல் அவரை சந்தித்து ஒரு வணக்கத்தை போட்டு வருகின்றனர் எம்எல்ஏக்கள். நேற்று காலை முதல் அடுத்தடுத்த எம்எல்ஏக்களின் வருகையால் தினகரன் படு பிசியாக இருந்தார்.

இந்தியா பாகிஸ்தான் மேட்சை விஞ்சும் வகையில் ஈபிஎஸ், தினகரன் மேட்ச் இருந்தது. ஈபிஎஸ் தரப்பில் இருந்து எத்தனை விக்கெட் தினகரனுக்கு ஆதரவாக விழுகிறது என்பதே நேற்றைய பரபரப்பு செய்தி.
இரவு வரை 27 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்த நிலையில் இன்று காலையில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ் மற்றும் உசிலம்பட்டி எம்எல்ஏ இருவரும் இன்று காலையில் அடையாறு வீட்டில் தினகரனை சந்தித்து அதரவு தெரிவித்தனர். தினகரன் தான் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர், சசிகலா தான் பொதுச்செயலாளர் என்று டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் கட்சி விஷயத்தில் அமைச்சர்கள் யாரும் தலையிட வேண்டாம் என்றும் தினகரன் ஆதரவு கோஷ்டிகள் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் தினகரனை எம்எல்ஏக்கள் சந்திப்பதுகுறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, எங்கள் சின்னம்மா தான் பொதுச் செயலாளர், டிடிவி தினகரன் தான் துணை பொதுச் செயலாளர். சட்ட மன்ற தேர்தல்நிச்சயமாக வரும் ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தான் தேர்தல். எங்களுக்குள் சின்ன சின்ன பிச்சனைகள் உள்ளன ஆனால் விரைவில் ஒன்று சேர்ந்து விடுவோம். கட்சியின் துணை பொதுச் செயலாளர் என்ற முறையில் டிடிவி தினகரன் அவர்களை அனைவரும் சந்தித்து வருகின்றனர். நேரம் கிடைக்கும் போது நானும் சந்திப்பேன். மானியகோரிக்கையின் போது எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கப்படும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications