அரசியல் நடத்த முடியாமல் திண்டாடி வருகிறார் கருணாநிதி... அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடந்த அதிமுக மகளிர் அணி தமிழக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக முதல்வர் ஜெயலலிதா பல்வேறு வரலாற்று திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். நடப்பு நிதியாண்டில் மட்டும் பள்ளிக் கல்வி துறைக்கு சுமார் 20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சட்டசபைத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி கொடுத்துள்ளார். மக்கள் கஷ்டங்களை உணர்ந்து மனித நேயத்துடன் தமிழக முதல்வர் செயலாற்றி வருகிறார்.
கருணாநிதி ஆட்சிக் காலத்தில் ஜாதி மதக் கலவரங்கள் அதிகமாக நடைபெற்றது. தற்போது அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. அதிமுக ஆட்சியில் குறைகள் ஏதும் சொல்ல வழியில்லாமல் அரசியல் நடத்த முடியாமல் கருணாநிதி திண்டாடி வருகின்றார்.
குடும்ப பிரச்சனையை தீர்க்க முடியாத கருணாநிதியால் நாட்டு மக்களைப் பற்றி பேச அருகதையே இல்லை என்றார் ராஜேந்திர பாலாஜி.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications