நாட்டை பார்க்கதான் நாங்க இருக்கோமே.. நடிகர்கள் வந்து என்ன பண்ணப் போறீங்க? அமைச்சர் கேள்வி!!
நாட்டை பார்க்க நாங்கள் இருக்கும் போது நடிகர்கள் வந்து என்ன செய்யயப்போகிறார்கள் என அமைச்சர் ஆர்பி உதயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: நாட்டை பார்க்க நாங்கள் இருக்கும் போது நடிகர்கள் வந்து என்ன செய்யயப்போகிறார்கள் என அமைச்சர் ஆர்பி உதயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் விஜய் சர்க்கார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பேச்சுதான் தற்போது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. விழாவில் பேசிய விஜய் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று சர்க்காரை அமைப்பார்கள். ஆனால் நாங்கள் சர்காரை அமைத்துவிட்டு தேர்தலில் நிற்கப் போகிறோம். ப
சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை. நிஜத்தில் முதலமைச்சரானால், முதலமைச்சராக நடிக்க மாட்டேன். உண்மையாக இருப்பேன். நான் முதலமைச்சரானால் லஞ்சம், ஊழலை ஒழிப்பேன் என தெரிவித்தார்.

முயற்சி பலிக்கவில்லை
இந்நிலையில் நடிகர் விஜயின் பேச்சுக்கு அமைச்சர் ஆர்பி உதயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். அவர் பேசியதாவது, நடிகர் விஜய் எப்போது அரசியலில் குதிக்கலாம் என காத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அவரது முயற்சி பலிக்கவில்லை. விஜய் அரசியலில் குதிக்க அவரது தந்தை வலையெல்லாம் கட்டி ஏற்பாடு செய்துள்ளார்.

எம்ஜிஆராக நினைக்கிறார்
ஆனால் விஜய்க்கு அரசியலில் குதிக்க பயம். தைரியம் இருந்தால் விஜய் அரசியலில் குதித்து அடிபடாமல் தப்பித்தால் அவர் சமத்து. இரண்டு ரசிகர்கள் ஆதரவாக பேசியதால் விஜய் தன்னை எம்ஜிஆர் போல் எண்ணிக்கொண்டிருக்கிறார்.

நாட்டை நாங்கள் பார்க்கிறோம்
புரட்சித்லைவர் எம்ஜிஆருக்கு இணையாக இந்த நாட்டில் யாரும் இல்லை. சினிமாவில் வேஷம் போடுவதுதான் உங்கள் வேலை. அதனை சரியாக செய்யுங்கள். நாட்டை பார்த்துக்கொள்ள நாங்கள் இருக்கிறோம்.

வேஷம் கட்டலாம்
மக்கள் உங்களிடம் சொன்னார்களா, விஜய் சார் நாட்டில் எதுவுமே சரியில்லை நீங்கள் அரசியலுக்கு வாருங்கள் என்று? முதல்வரானால் நடிக்க மாட்டேன் என்கிறார். முதல்வராக வேஷம் கட்டலாம். அதை மக்கள் ரசிப்பார்கள்.

தூக்கம் இல்லை
முதல்வராக செயல்படுவது சாதாரண காரியமல்ல. எங்களுக்கு சாப்பாடும் இல்லை தூக்கமும் இல்லை. எப்போதும் மக்கள் பணிதான்.

மனிதர் அல்ல புனிதர்
நீங்கள் ஒரு மணி நேரம் டயலாக் பேசி விட்டு 3 மணி நேரம் கேரவனில் தூங்குவீர்கள். எம்ஜிஆர் என்ன செய்தார் என நீங்கள் கேட்கலாம், எம்ஜிஆர் மனிதர் அல்ல புனிதர். இவ்வாறு அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தெரிவித்தார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications