சத்துணவு அமைப்பு பணிக்காக ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கவே இல்லை: அமைச்சர் சரோஜா திட்டவட்டம்
சத்துணவு அமைப்பு பணிக்காக லஞ்சம் வாங்கவில்லை என அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.
கோவை: சத்துணவு அமைப்பாளர் பணிக்காக மூன்று லட்சம் லஞ்ச ரூபாய் லஞ்சம் வாங்கவில்லை என சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.கோவையிலிருந்து சென்னை செல்வதற்காக நேற்று விமான நிலையம் வந்த சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அப்போது சத்துணவு திட்டத்தின்கீழ் 1 லட்சம் பணியிடங்களில் 15,000 நிரப்பப்பட்டுள்ளதாகவும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1 லட்சத்தி 25 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தெரிவித்தார். மேலும் உலகிலேயே முதலாவதாக தொடங்கப்பட்ட சத்துணவு திட்டத்தில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மூட்டை, புரதச்சத்து, உட்பட 13 வகையான உணவுகள் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

மேலும் தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மகளிர்கள் பயன்பெற்றுள்ளர் என்றார். 5,40,000 மகளிர்கள் உயர்கல்வி பெற்றுள்ளது, 44% பெண்கள் என்பது அரசின் சாதனையே எனவும் சரோஜா தெரிவித்தார்.
சமூக நலத்துறையில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே விதவைகள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் என பிரிக்கப்பட்டு சத்துணவு துறையில் பணியிடங்கள் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
இந்தாண்டு சமூக நலம் மற்றும் சத்துணவிற்கு 5,611 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 11,97,000 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பில் 4%, உயர்கல்வியில் 5% வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதனையடுத்து சத்துணவு அமைப்பாளர் பணிக்கு மூன்று லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்தால்தான் பணி கிடைக்கும் என்ற குற்றச்சாட்டு குறித்து கேள்விக்கு அப்படிப்பட்ட நிகழ்வு மறைந்த முதலமைச்சர்ஜெயலலிதாவின் அரசில் இருக்கவே முடியாது, இல்லவும் இல்லை என திட்டவட்டமாக
அமைச்சர் சரோஜா மறுத்தார்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications