Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் தலைதூக்கிய மின்வெட்டு? “சென்னையில் மின்தடை தான்”.. அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் மின்வெட்டு இல்லை எனவும், சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை ஏற்படுவதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதாக கடந்த ஒரு வார காலமாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக திருவல்லிக்கேணி, பெரம்பூர், ஈக்காட்டுத்தாங்கல், திருவொற்றியூர், கொளத்தூர், போரூர் உட்பட நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Minister Senthil Balaji has said that there is no power cut in Chennai

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தினமும் இரவு நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும், இது குறித்து புகார் அளிக்க போன் செய்தால் அதிகாரிகள் எடுப்பதில்லை என்றும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். திடீர் மின்வெட்டால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று இரவு சென்னையில் மின்வெட்டை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பான முறையில் மின்சாரத்துறை செயல்பட்டு வந்துள்ளது. புகார்கள் பாதியளவிற்கு கீழே குறைந்திருக்கின்றன. இதையும் முழுவதுமாக குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த 45 நாட்களில் மின் தேவை 19,387 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. இது கடந்த காலங்களை விட சுமார் 3 ஆயிரம் மெகாவாட் உயர்வாகும். ஒருநாள் சராசரி மின் தேவை 423 மில்லியன் யூனிட்டாக அதிகரித்துள்ளது. இவ்வளவு தேவை இருந்தாலும் கூட மாநிலம் முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டிருக்கிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக மின்சார பிரச்சனை சற்று அதிகமாக இருந்தது. நேற்று குறைக்கப்பட்டது. இன்று முழுவதுமாக குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எங்கெல்லாம் ஓவர் லோடு இருக்கிறதோ, அதையும் சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழ்நாட்டில் இரவு 8 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை மின் தேவை அதிகமிருக்கிறது. சென்னையில் மட்டும் மின்சாரம் 3,850 மெகாவாட் தேவைப்படுகிறது.

இதை சமாளிக்க தயாராக இருக்கிறோம். வடசென்னை அனல்மின் நிலையத்தில் மூன்றாவது அலகில் அடுத்த ஆண்டு பணிகள் தொடங்கும். புதிய அலகுகள் உற்பத்தியை தொடங்கும் போது மாநிலத்தின் தேவையை நம்மாலேயே பூர்த்தி செய்ய முடியும். கடந்த அதிமுக ஆட்சியில் மின் துறையில் சரியான முறையில் வேலை செய்யவில்லை. குறிப்பாக கொரோனா நெருக்கடி காலத்தில் அப்படியே விட்டு விட்டனர். இதை சரிசெய்வதற்கு கால அவகாசம் தேவைப்பட்டது. இதன் வெளிப்பாடு மின் தட்டுப்பாடாக தெரிந்திருக்கலாம்.

Minister Senthil Balaji has said that there is no power cut in Chennai

திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு என்று பொத்தாம்பொதுவாக பேசக்கூடாது. கடந்த ஆட்சியிலும் மின் வெட்டு, மின் தடை ஏற்பட்டிருக்கிறது. அதை புத்தகமாகவே போட்டு வைத்துள்ளேன். வேண்டுமென்றால் தருகிறேன். அதனை படித்து பார்த்துவிட்டு இந்த ஆட்சியில் எப்படி இருக்கிறது என ஒப்பிட்டு அதன்பிறகு கேள்வி எழுப்புங்கள்.

மின்வெட்டு, மின் தடை இரண்டிற்கு வித்தியாசம் உள்ளது. மின்வெட்டு என்பது தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தேவைக்கு ஏற்ப மின்சார உற்பத்தி இல்லை, கொள்முதல் இல்லை என்பதால் ஏற்படும் இடைவெளி. மின் தடை என்பது நிர்வாகம் சார்பில் பராமரிப்பு பணிகள், பழுது பார்க்கும் பணிகளுக்காக ஏற்படுவது. இவை இரண்டையும் சரியாக அறிந்துசெய்தி நிறுவனங்கள் சரியான செய்தியை வெளியிட வேண்டும்" என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+