தாய் - சேய் நலன்...
தமிழகத்தில் சுகாதாரம் மற்றும் தாய் சேய் நலனில் அரசு மருத்துவ நிலையங்களின் பங்கு மிகவும் சிறப்பாக இருப்பதன் காரணமாகத் தான், நாளொன்றுக்கு 1800க்கும் மேற்பட்ட பிரசவங்கள் அரசு மருத்துவ நிலையங்களில் நடைபெறுகின்றன. ஆண்டொன்றுக்கு சுமார் 6.8 லட்சம் குழந்தைகள் அரசு மருத்துவ நிலையங்களில் பிறக்கின்றன.
உண்மைநிலை இவ்வாறிருக்க, ஏதோ தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் எந்தவொரு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றும், அரசு சுகாதார நிலையங்கள் சரியாக செயல்படவில்லை என்றும் தவறான அறிக்கைகளை சிலர் பத்திரிகைகளில் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்தியாவின் சிசு மரண விகிதம் 40 ஆக இருக்க, தமிழ்நாடு ஏற்கனவே சிசு மரண விகிதத்தில் 21 என்ற நிலையை எட்டி பெரிய மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் சிறப்பாக தாய் சேய் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் காரணத்தினால் 99.8 விழுக்காடு தாய்மார்களின் பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன.
பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு திட்டம் :
நாளொன்றுக்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் நல்லமுறையில் பிறந்தாலும், பல காரணங்களினால் ஒரு சில நேர்வுகளில் பிரசவத்திற்குப் பின்பு உயிருக்குப் போராடும் நிலையில் சில குழந்தைகள் பிறக்கின்றன. இத்தகைய பச்சிளம் குழந்தைகளைக் காப்பதற்கென ஏற்படுத்திய குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு திட்டம் என்பது ஒரு மகத்தான திட்டம். இத்திட்டத்தைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல், குறைகூறும் வகையில் பலர் அங்கு ஏற்படும் இறப்பைக் குறித்து தவறான அறிக்கைகளை வெளியிடுகிறார்கள்.
ஆரோக்கியமான பிரசவங்கள் நடக்கும்போது பிரசவம் முடிந்தவுடன் மருத்துவமனையை விட்டு தாய்மார்கள் குழந்தையுடன் சென்று விடுகின்றனர். ஆனால் குறை மாத பிரசவம், பிறவி குறைபாடு, பிரசவத்தின்போது குழந்தைக்கு ஏற்படும் மூச்சுத் திணறல், வலிப்பு, முக்கிய உறுப்புகள் முதிர்ச்சி அடையாத நிலையில் பிறக்கும் எடை குறைந்த குழந்தைகள், குவளைநீரால் புரையேறுதல், தொப்புள்கொடி கழுத்தைச் சுற்றிக்கொள்ளும் நேர்வுகள், கருப்பையில் வளர்ச்சி குன்றிய குழந்தை மற்றும் இதர காரணங்களினால் உயிருக்குப் போராடும் நிலையில் சில பிரசவங்கள் நிகழ்கின்றன.
இப்படி பிறக்கும் சிசுக்களைக் காப்பாற்றும் நோக்கத்துடன்தான் தமிழகத்தில் 64 பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் 114 பச்சிளங்குழந்தைகள் நிலைப்படுத்தும் பிரிவு போன்ற மையங்கள் நல்லமுறையில் செயல்பட்டு வருகின்றன. ஏற்கனவே சுட்டிக்காட்டியவாறு, பல்வேறு காரணங்களினால் உயிருக்குப் போராடும் நிலையில் உள்ள பச்சிளங்குழந்தைகளுக்கு தீவிர சிசிக்சை அளிப்பதற்காகத்தான் இந்த மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications