சென்னையில் திடீர் மின்தடைக்கு காரணம் என்ன? அமைச்சர் தங்கமணி விளக்கம்
சென்னை: சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ள நிலையில், மின்வெட்டு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து மின்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. வடசென்னை, ராயப்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவல்லிக்கேணி, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, ஐ.ஓ.சி, பெரம்பூர், புரசைவாக்கம், எழும்பூர், சென்ட்ரல், அண்ணா சாலை, தி.நகர், மடிப்பாக்கம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. கோடை காலம் என்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், சென்னை அண்ணா சாலையிலுள்ள தலைமை அலுவலகத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மின்வெட்டு குறித்து விளக்கம் அளித்த அவர்,மணலி - மயிலாப்பூர் இடையிலான உயர் மின் அழுத்த பாதையில் பழுது காரணமாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. பழுதை சீர் செய்யும் பணி துரிதமாக நடைபெறுகிறது.
பழுதை சீரமைக்கும் பணியில் 200க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு விரைவில் மின்சாரம் வழங்கப்படும். அதுவரை, பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அமைச்சர் தங்கமணி கேட்டுக்கொண்டார். மேலும், மின் தடை காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகள் பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications