எம்.ஜி.ஆருக்கு கல்தா.. ஜெ. முகமூடியுடன் வலம் வந்த மகளிர் படை.. ஆர்.கே.நகரில் அதிமுக அமர்க்களம்!
சென்னை: ஒரு ஜெயலலிதா வந்தாலே வாக்காளர்களுக்கு ஆச்சரியம் அதிகரிக்கும். ஆயிரக்கணக்கான ஜெயலலிதாக்கள்... இரட்டை இலை சின்னத்துடன் இரு விரலை உயர்த்தி வாக்கு சேகரித்தால் எப்படி இருக்கும். ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கும் நேற்று அப்படித்தான் இருந்தது.
தேர்தல் வந்தாலே எம்.ஜி.ஆர் போல வேடமணிந்தவர் ஆடி பாடி இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பார். அது பழைய டிரென்டு என்று நினைத்து விட்டார்களோ என்னவோ? மகளிர் அணியினர் ஜெயலலிதா முகமூடியை போட்டுக்கொண்டு வாக்கு சேகரித்தனர். வீதி தோறும் வலம் வந்த ஜெயலலிதாக்களுக்கு மக்களிடம் அமோக ஆதரவும் வரவேற்பும் கிடைத்தது.

வளர்மதியின் பலே ஐடியா!
ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்கு சேகரிக்க தினசரி புது புது ஐடியாவாக யோசித்து செயல்படுத்திவரும் அமைச்சர் வளர்மதிக்கு திடீரென்று உதித்தது புது யோசனை. அதுதான் அம்மா முகமூடி. உடனே அதை செயல்படுத்தியும்விட்டார்.

ஜெ. முகமூடி
மகளிர் அணியினர் அனைவருக்கும் ஜெயலலிதாவின் முகமூடியை போட்டுவிட்டு வாக்கு சேகரிக்க கிளம்பினார். இந்தயுக்திக்கு வாக்காளர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.

ஜெ.மயமான ஆர்.கே.நகர்
வரிசை வரிசையாக ஜெயலலிதா முகமூடி அணிந்த பெண்கள் இரட்டை இலை சின்னம் தாங்கியபடி வலம் வந்து வாக்கு சேகரித்தனர். இதனால் ஆர்.கே.நகர் முழுவதும் அம்மா மயமாக காட்சியளித்தது.

நாங்களும் வருவோம்ல
வளர்மதி தலைமையில் பெண்கள் வாக்கு சேகரித்த வரும்போது வீட்டின் மாடியில் இருந்து ஜெயலலிதா படம் போட்ட பதாகையை உயர்த்தி பிடித்து எங்களின் ஆதரவு உங்களுக்கே என்று சொல்லாமல் சொன்னார் ஒரு வாக்காளர்.

இது தனி பிரச்சாரம்
கரகாட்டம், ஒயிலாட்டம் ஆடி வாக்காளர்களைக் கவருவதை விட அனைவரும் ஜெயலலிதாவின் முகமூடியை மாட்டிவிட்டு வாக்கு சேகரித்தது ஆர்.கே.நகர்வாசிகளை கவரத்தான் செய்தது.

ஒரு நாள் மட்டுமே
தான் போட்டியிடும் தொகுதியில் ஜூன் 21ம் தேதி ஒருநாள் மட்டுமே ஜெயலலிதா வாக்கு சேகரிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அம்மா முகமூடியை போட்டுவிட்டு வாக்காளர்களை மட்டுமல்ல... ஜெயலலிதாவையும் கவர்ந்து விட்டார் வளர்மதி என்றே கூறவேண்டும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications