ஜெ. குறித்த கருத்துக்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்.. எஸ்.பி.வேலுமணி ஆவேசம்
ஜெயலலிதா குறித்த கருத்துக்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்த கருத்துக்கு தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஊரக வளர்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தையொட்டி தமிழக அரசின் சார்பில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை நேற்று முன்தினம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிவைத்தார்.

இதையடுத்து, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற குற்றவாளி ஒருவரின் பெயரில் அரசுத் திட்டங்கள் தொடங்குவதை ஏற்க முடியாது என தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
மேலும் தலைமை செயலகம், அமைச்சர்கள் அறை, உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஜெயலலிதா படம் வைக்கப்பட்டுள்ளது. இதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை செயலாளரிடம் ஸ்டாலின் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், மு.க.ஸ்டாலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஊரக வளர்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தவர். இந்திய தேசத்தையே தமிழகத்தின் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தவர். பல்வேறு நல்ல திட்டங்களை தமிழக மக்களுக்காக செய்தவர். அவர் செய்த திட்டங்களை அவரது படம் போடாமலேயே அவரது பெயர் சொல்லும். இருந்தாலும் அவரை குற்றவாளி என்று ஸ்டாலின் கூறுவது தவறு. அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications