விஜயபாஸ்கருக்கு நேரம் சரியில்லை... அவர் மூலம்தான் சேகர் ரெட்டியுடன் கரம் கோர்த்தாராம் பிரேம்!
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சேகர் ரெட்டியின் கூட்டாளி பிரேம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் அறிமுகமானவர் என்பது தெரியவந்துள்ளது.
சென்னை: தமிழக அரசின் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரரும் தொழிலதிபருமான சேகர் ரெட்டி போயஸ்கார்டன் வீட்டிற்கு நெருக்கமானவர். அவரது உறவினர் சீனிவாச ரெட்டி, நண்பர் பிரேம் ஆகியோர் வீடுகளில் கடந்த 7ம் தேதி முதல் தொடர்ந்து 4 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகளும், அமலாக் கத்துறை அதிகாரிகளும் சோதனை நடத்தினர்.
சென்னை, வேலூரில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.147 கோடி பணம், 178 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட பணத்தில் ரூ.34 கோடிக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன. இந்த புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை 24 நாட்களில் இவர்கள் மாற்றியுள்ளது தெரியவந்தது.
சேகர் ரெட்டி வீட்டில் புதிய ரூபாய் நோட்டுகள் சிக்கியது குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதில் சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி, பிரேம் ஆகியோர் வங்கி அதிகாரிகளின் துணையுடன் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை முறைகேடாக பெற்றது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து இந்திய தண்டனைச் சட்டம் 120பி, 409, 420 மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் 13(2), 13(1) ஆகிய பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சேகர் ரெட்டி கைது
சேகர் ரெட்டி. அவரது நண்பர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் முடிவில் சேகர் ரெட்டியும் அவரது நண்பர் சீனிவாசலுவும் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஜனவரி 4 வரை சிறை
இந்த நிலையில் சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் 3 பேரை இன்று சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர். பிரேம், ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோரை கைது செய்து சிபிஐ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் 3 பேரையும் ஜனவரி 4ம் தேதிவரை சிறையில் அடைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.

சேகர் ரெட்டியின் நண்பர்கள்
கைது செய்யப்பட்ட 3 பேரில் பிரேம் என்பவர் சேகர் ரெட்டியின் நீண்டகால நண்பர் ஆவார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் சேகர் ரெட்டிக்கு பிரேம் அறிமுகமானவர். பிடிபட்டுள்ள மற்றொரு நபர் திண்டுக்கல் மணல் வியாபாரி ரத்தினம் ஆவார். 3வது ஆள் மணல் வியாபாரி புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆவார்.
ரத்தினம், சேகர் ரெட்டி, புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோர் இணைந்து மணல் வியாபாரம் செய்து வந்தனர்.

சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், சேகர் ரெட்டிக்கும் நீண்ட கால நட்பு உண்டு. இந்த நட்பின் அடிப்படையிலேயே பிரேமுடன் நட்பான சேகர் ரெட்டி தொழில் கூட்டாளியாகவும் மாறினார். இந்த நிலையில் தற்போது சேகர் ரெட்டியுடன் அவரது நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை இதோடு நிற்குமா, அல்லது அமைச்சர்கள் வரை நீளுமா என்பது இன்னும் சில தினங்களில் தெரியவரும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications