மொத்தமாக தூர்வாரப்பட்ட திருச்செந்தூர் உண்டியல்.. அதன் அடியில் இருந்த அதிசயம்.. வியந்த பக்தர்கள்
திருச்செந்தூர்: உண்டியலின் அடிமட்டத்தில் புழுதிக்குள் வந்த புதிரான காசுகள், திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோடிகளில் குவிந்த பணம்.. அள்ள அள்ள தங்கம்.. கொட்ட கொட்ட வெள்ளி.. செப்டம்பர் மாதத்தில் மட்டும் இவ்வளவு பணமா என்கிற அளவிற்கு 2.93 கோடி காணிக்கையாக கிடைத்துள்ளது.
உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் மாதந்தோறும் எண்ணப்படுவது வழக்கம். இந்த சூழலில் மத்திய அரசு அறிவித்த 2000 ரூபாய் செல்லும் காலம் செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி முன்கூட்டியே தமிழகத்தில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களின் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டு வருகிறது.

அந்த வகையில் செப்டம்பர் மாதம் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி திருந்செந்தூர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் தலைமையில் இணை ஆணையர் கார்த்திக் முன்னிலையில் நேற்று கோவில் வசந்த மண்டபத்தில் தொடங்கியது.
உண்டியல் எண்ணும் பணியில் அறங்காவலர் குழு உறுப்பினர் செந்தில் முருகன், தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், திருச்செந்தூர் ஆய்வாளர் செந்தில் நாயகி, பொதுமக்கள் பிரதிநிதியாக மோகன், சுப்பிரமணிய மணியன், அயல் பணி மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவார பணிக்குழுவினர்கள், தூத்துக்குடி ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப்பணிக் குழுவினர்கள் ஈடுபட்டார்கள்.
இதில் நிரந்தர உண்டியல் மூலம் ரூ.2 கோடியே 76 லட்சத்து 88 ஆயிரத்து 763 இருந்தது. ஆவணி திருவிழா தற்காலிக உண்டியலில் ரூ.25 ஆயிரத்து 520 ரூபாயும், மேல கோபுர திருப்பணி உண்டியலில் ரூ.875 ரூபாயும். கோசாலை பராமரிப்பு உண்டியல் மூலம் ரூ.19 ஆயிரத்து 711 ரூபாயும் இருந்தது.
யானை பராமரிப்பு உண்டியல் மூலம் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 89 ரூபாயும், கோவில் அன்னதானம் மூலம் ரூ.15லட்சத்து 8 ஆயிரத்து 214, மேல கோவில் உண்டியல் மூலம் ரூ.15 ஆயிரத்து 113 ரூபாயும், நாசரேத் கோவில் மூலம் ரூ. 1,315, கிருஷ்ணாபுரம் கோவில் மூலம் ரூ.7ஆயிரத்து 432ம் என மொத்தம் ரூ.2 கோடியே 93 லட்சத்து 80 ஆயிரத்து 32 ரூபாயும் இருந்தது.
இதேபோல், தங்கம் 2 ஆயிரத்து 100 கிராமும், வெள்ளி 19 ஆயிரம் கிராமும், 424 வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளதாக கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த உண்டியலின் அடியில் ஏராளமான வித்தியாசமான காசுகளும் இருந்துள்ளன.
இந்த காசுகள் பல பலஆண்டுகள் பழமையானவை என்றும் கூறப்படுகிறது. இந்த காசுகள் பல பொக்கிசம் போல் பாதுகாக்கப்பட்டவை என்றும் சொல்லப்படுகிறது. அவற்றை திருச்செந்தூர் உண்டியலில் போட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications