திருமணத்தில் முடிந்த மிஸ்டு கா(த)ல்- போராடி காதலனை கரம் பிடித்த காதலி
நாகர்கோவில்: மிஸ்டு கால் கொடுத்தவரையே காதலித்து போராடி காதலி கரம் பிடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் பபிதா. இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செல்போனில் மிஸ்டு கால் ஒன்று வந்தது. உடனே பபிதா அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது எதிரே பேசிய நபர் தெரியாமல் எண்ணை மாற்றி போட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். உடனே அந்த நபரிடம் பபிதா எந்த ஊர் என்று கேட்டார். அவர் மதுரை என்றும், தனது பெயர் தினேஷ் என்றும் அறிமுகம் செய்து கொண்டார். தினேஷ் கோவையில் உள்ள ஆட்டோ மொபைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாகவும் கூறினார்.

சில நாட்கள் கழித்து தினேஷ் மீண்டும் பபிதாவிடம் பேசினார். இருவரும் அன்பாக பேசி பழக தொடங்க, அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. காதலர்கள் இருவரும் மணிக்கணக்கில் தினமும் பேசி வந்தனர். காதல் விவகாரம் இரு வீட்டாரின் பெற்றோருக்கும் தெரிய வந்தது. காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து தினேஷ் தனது வீட்டை விட்டு வெளியேறி நாகர்கோவிலுக்கு வந்தார். பபிதாவும் தினேஷும் நாகர்கோவிலில் சந்தித்தனர்.
இருவரும் நாகர்கோவிலை சேர்ந்த வழக்கறிஞர் சிவாஜியிடம் தஞ்சமடைந்தனர். அவர் காதல் ஜோடிக்கு நாகர்கோவில் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் வைத்து திருமணம் செய்து வைத்தார். காதல் ஜோடி திருமணம் செய்து கொண்ட தகவல் அவர்களது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது.
மிஸ்டு கால் தொடங்கி வைத்த காதலை மூன்று வருடமாக ஆராதித்து திருமணம் செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications