ஈழப் போரில் பிரிந்து... வாட்ஸ் ஆப்பால் 36 ஆண்டுகளுக்குப் பின் திருச்சியில் இணைந்த குடும்பம்!
திருச்சி: இலங்கையில் போரினால் பிரிந்த குடும்பத்தினர் சுமார் 36 ஆண்டுகளுக்கு பின் வாட்ஸ்-ஆப் தகவலால் திருச்சியில் மீண்டும் ஒன்றாக இணைந்த உணர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
திருச்சி சுப்ரமணியபுரத்தில் யோவான் தேவாலயத்தின் அருகே வசித்து வருபவர் சாமுவேல்(72). இவருக்கு சலோமி என்ற மனைவியும், யேசுதாஸ் என்ற மகனும் உள்ளனர். சாமுவேலின் பூர்வீகம் இலங்கையில் உள்ள கண்டி ஆகும். கடந்த 1982ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் போர் தீவிரம் அடைந்ததால், சாமுவேல் தனது குடும்பத்துடன் இலங்கையை விட்டு வெளியேறி திருச்சியில் குடியேறினார்.

அப்போது சாமுவேலுடன் அவரது தங்கை லீதியாள் குடும்பம் திருச்சி வந்தது. அவர்களும் சாமுவேலின் வீட்டின் அருகேயே வசித்து வருகின்றனர். சாமுவேல் மற்றும் லீதியாளுக்கு ஞானப்பூ என்ற அக்கா ஒருவர் உள்ளார். இவர் தனது குடும்பத்துடன் 1979ம் ஆண்டே இலங்கையை விட்டு வெளியேறி விட்டார். இதனால், சாமுவேல், லீதியாள் குடும்பத்திற்கும், ஞானப்பூ குடும்பத்திற்கும் இடையே தொடர்பில்லை. இரண்டு குடும்பத்தாரும் ஞானப்பூவைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் ஞானவேலின் மருமகள் சுகந்தி, வாட்ஸ் ஆப் மூலம் தனது மாமனார் சாமுவேல் புகைப்படத்தை வெளியிட்டு, அவர் ஞானப்பூவை தேடும் தகவலையும் பதிவு செய்தார். இந்தத் தகவல் இலங்கை அகதிகள் உள்ள குரூப் மூலமாக பரவியது.
சாமுவேல் திருச்சியில் இருப்பதாகவும் அவரும் ஞானப்பூவை தேடி வருவதாகவும் உறவினர்கள் மூலம் ஞானப்பூவின் மகன் லாசருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து லாசர், செல்போன் மூலம் சாமுவேலின் மருமகள் சுகந்தியை கடந்த வெள்ளிக்கிழமை தொடர்பு கொண்டார். அப்போது சாமுவேலும், அவரது தங்கை லீதியாளும் திருச்சியில் குடும்பத்துடன் இருப்பது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள கானம் கிராமத்தில் இருந்த ஞானப்பூ குடும்பத்தார் நேற்று காலை திருச்சி வந்தனர். 36 ஆண்டுகளுக்குப்பின் ஒன்று சேர்ந்த அக்குடும்பத்தார் ஆனந்தக்கண்ணீர் வடித்தனர்.
இலங்கையில் போரினால் பிரிந்த குடும்பத்தினர் 36 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சந்தித்தது அவர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications