நந்தினி மீது கடுங்கோபம்! மருமகளின் தலையை வெட்டிய மாமியார் மேரி! கள்ளக்குறிச்சியில் என்னாச்சு?
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் காணாமல் போன நந்தினி, தனது மாமியாராலேயே தலையை வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மகனின் இரண்டாவது திருமணத்தால் கோபமடைந்த மாமியார், இந்த கொலையை முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்துள்ளார்.
சங்கராபுரம் வளையம்பட்டையைச் சேர்ந்த நந்தினி, விரியூர் மருத்துவர் ரொசாரியாவை இரண்டாம் திருமணம் செய்து, கணவருடன் விரியூரில் வசித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களாக அவர் காணாமல் போயிருந்தார். இதையடுத்து, அவரது கணவர் சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

நந்தினியை அவரது மாமியார் கிறிஸ்துவமேரி அழைத்துச் சென்றதாக அவர் அப்புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், போலீஸார் கிறிஸ்துவமேரியிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தோழியுடன் சேர்ந்து மருமகள் நந்தினி தலையை வெட்டி படுகொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். நந்தினியின் தலையை ஒரு இடத்திலும், உடலின் மற்ற பாகங்களை வேறொரு இடத்திலும் புதைத்ததாகவும் வாக்குமூலம் அளித்தார்.
மகனின் இரண்டாம் திருமணத்தால் ஏற்பட்ட ஆத்திரத்தில், கடந்த மூன்று மாதங்களாகவே திட்டமிட்டு இந்த கொலையை செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கொலை நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். நந்தினியின் உடல் மீட்கப்பட்டு, உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாமியாரால் மருமகள் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்ட இந்த கொடூர சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications