431 நாளில் செவ்வாய்க்கு ஒரு ட்ரிப்... சென்னை மாணவர்களின் ஆய்வறிக்கையை தேர்வு செய்தது நாசா
சென்னை: செவ்வாய் கிரகத்திற்கு 431 நாட்களில் சென்று வரலாம் என்ற சென்னை தனியார் கல்லூரி மாணவர்களின் ஆய்வறிக்கையை நாசா தேர்வு செய்துள்ளது.
சர்வதேச அளவில் பால்வெளி மற்றும் அதிலுள்ள மற்ற கிரகங்கள் பற்றி தொடர்ந்து ஆய்வு நடந்து வருகிறது. அதன்படி, வரும் 2018-ஆம் ஆண்டில் இரு பயணிகளுடன் ஒரு விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புவதற்கான திட்டப் பணிகளை நாசா மேற்கொண்டுள்ளது.
இத்திட்டத்திற்கு தகுந்த ஆலோசனைகளை வழங்குமாறு சர்வதேச அளவில் கல்லூரி மாணவர்களிடையே போட்டி ஒன்றை நடத்தியது நாசா.

பொறியியல் கல்லூரி மாணவர்கள்...
நாசாவின் இந்தப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 50 பொறியியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

சிறந்த 10 கட்டுரைகள்...
மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகளை பரிசீலித்த நாசா, அவற்றில் இருந்து சிறந்த 10 கட்டுரைகளை தேர்வு செய்தது.

சென்னை மாணவர்கள்...
அந்த வெற்றிப் பெற்ற 10 ஆய்வுக் கட்டுரையில், சென்னையில் உள்ள வெங்கடேஷ்வரா பொறியியல் கல்லூரி மாணவர்கள் எட்டுப் பேர் சேர்ந்து அனுப்பிய ஆய்வுக்கட்டுரையும் ஒன்று.

செவ்வாய்க்கு ஒரு ஜாலி ட்ரிப்...
ஐம்பது பக்கங்களைக் கொண்ட அந்த ஆய்வுக் கட்டுரையில் 431 நாட்களில் செவ்வாய் கிரகத்திற்கு சென்று வருவது எப்படி என தமிழக மாணவர்கள் அறிவியியல் பூர்வமாக விளக்கியிருந்தனர்.

நேரடி விளக்கம்...
சென்னைக் கல்லூரி மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைத் தேர்வானதைத் தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி இத்திட்ட அறிக்கை குறித்து விளக்கம் அளிக்க நாசா அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications