ஸ்டாலினுக்கு இந்த 2 பதவியும் எப்படி கிடைத்தது.. சொல்லச் சொல்லுங்க பார்ப்போம்.. அழகிரி சவால்
Recommended Video

மதுரை: ஸ்டாலினுக்கு துணை முதல்வர் மற்றும் பொருளாளர் பதவிகள் எப்படி கிடைத்தன என்பதை மனசாட்சியை தொட்டு சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம் என்று மு. க. அழகிரி சவால் விடுத்துள்ளார்.
திமுகவுக்கு தனது பலத்தை நிரூபிப்பேன் என கடந்த 5-ஆம் தேதி பேரணியை நடத்தினார். அப்போது லட்சக்கணக்கானோர் தனது பேரணிக்கு வந்ததாக அவர் தெரிவித்தார்.
ஆனால் உண்மையை பார்க்கும் போது ஆயிரக்கணக்கானோர் மட்டுமே அங்கு கலந்து கொண்டார். இந்நிலையில் பேரணி குறித்து ரிபப்ளிக் வேர்ல்டு என்ற ஆங்கில பத்திரிகை சானலுக்கு அழகிரி பேட்டி அளித்தார்.

தந்தையிடம் எழுப்பினேன்
அப்போது அவர் கூறுகையில் பொதுக் குழுவே வழிமுறைகளுக்கு எதிராக ஏற்படுத்தப்பட்டது. இதுதான் எனது குற்றச்சாட்டு. ஜனநாயக முறைபடி பொதுக் குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்படவில்லை. இதுகுறித்தும் மற்ற விவகாரங்கள் குறித்தும் எனது தந்தையிடம் எழுப்பினேன்.

ஏற்பேன்
என்னை திமுகவில் இணைத்து கொண்டால் மட்டுமே ஸ்டாலினை தலைவராக ஏற்பேன் என்பதை ஏற்கெனவே தெளிவுப்படுத்திவிட்டேன். நான் ஸ்டாலினின் தலைமையை ஏற்க விரும்புவதாக ஊடகங்களும் திரித்து கூறிவிட்டேன்.

தலைமை
என்னை கட்சியில் சேர்த்து கொண்டால் மட்டுமே ஸ்டாலினின் தலைமையை ஏற்பேன் என்று கூறினேன். என்னை கட்சியில் சேர்த்து கொள்ளாவிட்டால் நான் எப்படி ஸ்டாலினை தலைவராக ஏற்க முடியும் ? கட்சியில் என்னை சேர்த்து கொள்ளாவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறியது தேர்தல் தோல்விகளைத்தான் கூறினேன். என்னை கட்சியிலிருந்து நீக்கிய பிறகு எந்த தேர்தல்களிலும் திமுக வெற்றி பெறவில்லை. இது தொடரும்.

துணை முதல்வர்
துணை முதல்வர் மற்றும் பொருளாளர் ஆகிய பதவிகள் ஸ்டாலினுக்கு எப்படி கிடைத்தது என்பதை அவரது மனசாட்சியை தொட்டு சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம். அதை நான் சொல்லமாட்டேன். அவரது மனசாட்சிக்கு எல்லாம் தெரியும் என்றார் அழகிரி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications