அண்ணாவும், நானும் நைட் ஷோ பார்ப்போம்.. மலரும் நினைவுகளை அசைபோட்ட அழகிரி
மதுரை: அண்ணாதுரையும் நானும் நைட்ஷோ சென்று பார்ப்போம் என்று தனது மலரும் நினைவுகளை அழகிரி தெரிவித்தார்.
அஞ்சாநெஞ்சன் அழகிரியின் கோட்டையாக இருந்தது மதுரை. அப்போது தேர்தல் சமயங்களில் அழகிரியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
தனக்கென்று ஆதரவாளர்களை சேர்த்து வைத்துள்ளார். இவர்களுக்கு முறைபட் திமுகவில் பதவி கொடுக்கவில்லை என்றுதான் தந்தை கருணாநிதியிடம் புகார் கூறிய அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.

மலரும் நினைவுகள்
இந்நிலையில் தனது அரசியல் பயணம் உள்பட ஏராளமான விஷயங்களை அழகிரி ரிபப்ளிக் வேர்ல்டு என்ற ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில் எனக்கு ஏராளமான மலரும் நினைவுகள் உண்டு.

பாடுமாறும் கேட்பார்
எங்களுக்கு சிறுவயதாக இருக்கும் போது அண்ணாதுரை அவ்வப்போது எங்கள் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். அப்போது என்னையும் எனது அண்ணன் முத்துவையும் பாடல்களை பாடுமாறும் நடனம் ஆடுமாறும் கேட்பார்.

பிரியமாக இருப்பார்
காஞ்சிபுரத்துக்கு வருமாறும் அழைப்பு விடுப்பார். வாரத்தில் ஒரு நாள் எங்களை இரவு காட்சிக்காக சினிமாவுக்கு அழைத்து சென்றார். எங்கள் மீது மிகவும் பிரியமாக இருப்பார்.

எளிமை
அவர் கேரம் போர்டு, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளையும் எங்களுடன் விளையாடுவார். அப்பாவுடன் 11 வயது முதல் உடனிருப்பதால் அரசியலை கற்பது எளிதாக இருந்தது என்றார் அழகிரி.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications