ஊர் ஊரா சுற்றுகிறார் ஸ்டாலின்... இப்ப டெபாசிட்டே போச்சே... அழகிரி அதகளம்
ஸ்டாலின் ஊர் ஊராக சுற்றுகிறார். இப்படி இருந்தால் கட்சி எப்படி ஜெயிக்கும்? இப்ப டெபாசிட்டே போச்சே என்று கேட்டுள்ளார் மு.க. அழகிரி.
Recommended Video

சென்னை: ஸ்டாலின் செயல்படாமல் எல்லாம் இல்லை, அவர் ஊர் ஊராக சுற்றுகிறார், ஆனாலும் என்ன பிரயோசனம், இப்ப டெபாசிட்டே போச்சே என்று கேட்டுள்ளார் அவரது அண்ணன் அழகிரி.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டதோடு டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது. இது குறித்து பலரும் கருத்து கூறி வருகின்றனர். இது வேறு எதற்கோ போடப்பட்ட ஸ்கெட்ச் என்று திமுகவினர் கூறினாலும் அழகிரியின் கருத்து வேறு மாதிரியாக உள்ளது.
படுதோல்விக்குக் காரணம் ஸ்டாலினும், அவரது செயல்பாடுகளும்தான் என்று கூறியுள்ளார் மு.க. அழகிரி. கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ரிங் மாஸ்டர்
கருணாநிதி நன்றாக களப்பணியாற்றுவார். அவர் ஆக்டிவாக இருக்கும் வரை திமுக ஜெயித்துள்ளது. போன தேர்தலில் 89 சீட்டுகளை வென்று எதிர்கட்சியாக இருந்தது. இப்போது படுதோல்வியடைந்துள்ளது.

எல்லோருக்கும் என்ன வேலை
எல்லோருடனும் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டனர். என்ன வேலை செய்தார்கள்? அதை மேற்பார்வை பார்த்தது யார்? கருணாநிதி அதிகாலை 2மணிக்கு எழுந்து களத்திற்கு போவார். இப்போது யாராவது அப்படி இருந்தார்களா?

ஸ்டாலின் பணி
ஸ்டாலின் ஊர் ஊராக போனார். அதைத்தவிர வேறு என்ன செய்தார். ஜீப்பில் போனால் மட்டும் போதுமா? அவர் பார்த்த வேலைதான் ஆர்.கே.நகரில் தெரிந்து விட்டதே. இது ஒன்று போதாதா?

இது அவமானம் இல்லையா?
அதிமுக, திமுக மீது உள்ள வெறுப்புதான் தினகரனுக்கு ஓட்டாக விழுந்துள்ளது. திமுகவிற்கு டெபாசிட் கூட கிடைக்கலையே இது அவமானம் இல்லையா? திமுகவினர் காசுக்கு விலை போய்விட்டதாக கூறுவது அவர்களுக்கு
வலிக்காதா? யார் யாரையோ பக்கத்தில் வைத்துக்கொண்டிருந்தால் கட்சி எப்படி உறுப்படும் என்றும் கேட்டுள்ளார் அழகிரி.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications