பதவியில் இல்லாத ஓபிஎஸ்ஸை சந்தித்த பிரதமர் எனக்கு அனுமதி தராதது ஏன்?...மு.க.ஸ்டாலின் கேள்வி

எந்தப் பதவியிலும் இல்லாத ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த பிரதமர் அனைத்துக் கட்சி கூட்ட தீர்மான நகலை கொடுக்கச் சென்ற தன்னை சந்திக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம் : ஓ.பன்னீர்செல்வத்தை உடனடியாக சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் 40 நாட்களுக்கும் மேலாக போராடிய விவசாயிகளை சந்திக்காதது ஏன் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கடும் வறட்சியால் ஏரி குளங்கள் வற்றி நீரின்றி காணப்படும் நிலையில் சமீப காலமாக தண்ணீர் சேமிப்போம், தலைமுறை காப்போம் என்று தீவிர பிரச்சாரம் செய்து வரும் மு.க.ஸ்டாலின் ஏரி குளங்களை தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்து வருகிறார்.

கடந்த 7ம் தேதி சைதாப்பேட்டையிலுள்ள கோவிலில் குளத்தை தூர்வாரும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த ஸ்டாலின் தொடர்ந்து கொளத்தூர் ஜிகேஎம் காலணி முத்துமாரியம்மன் கோவில் குளம், தென்னூரிலுள்ள ஏரி தூர் வாரும் பணி என தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை தூய்மைப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளார்.

 மக்கள் பற்றி கவலையில்லை

மக்கள் பற்றி கவலையில்லை

இந்நிலையில் இன்று காஞ்சிபுரத்தை அடுத்த தண்டலத்தில் கோவில் குளத்தை தூர்வாரும் பணியை மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மக்களின் குடிநீர் பிரச்னை பற்றி அரசு கவலைப்பட்டதாக தெரியவில்லை. தமிழக அரசுக்கு அது பற்றி எந்த கவலையும் இல்லை. நீர் நிலைகளைத் தூர்வாரும் பணியில் அரசு எந்த கவனமும் செலுத்ததாததால் திமுக இந்தப் பணியை செய்து வருகிறது" என்றார்.

 யார் ஆளும் கட்சி?

யார் ஆளும் கட்சி?

"நீர்நிலைகளை தூர்வாரும் பணியால் பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும் அவை ஊக்கமளிப்பதாகவும், தமிழகத்தில் ஆளும் கட்சியாக திமுகவைத் தான் மக்கள் பார்க்கிறார்கள்" என்றும் ஸ்டாலின் கூறினார். எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அவற்றை கடந்து மக்கள் நலனிற்காக எப்போதும் கவலைப்படும் ஒரே கட்சி திமுக தான் என்றும் அவர் தெரிவித்தார்.

 விவசாயிகளை சந்திக்க நேரமில்லை

விவசாயிகளை சந்திக்க நேரமில்லை

அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சியை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்ற அன்றைய தினம் மாலையே பிரதமரை சந்தித்து தமிழ்நாட்டு நலன்களைப் பற்றி பேசியுள்ளார். ஆனால் தங்கள் உரிமைக்காக தொடர்ந்து 40 நாட்களுக்கு மேல் டெல்லி வீதிகளில் போராடிய விவசாயிகளை பார்க்க மட்டும் பிரதமருக்கு நேரமில்லை என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

 ஓ.பிஎஸ்க்கு ஏன் முக்கியத்துவம்

ஓ.பிஎஸ்க்கு ஏன் முக்கியத்துவம்

எந்தப் பதவியிலும் இல்லாத ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க பிரதமர் ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது நாட்டு மக்களுக்கே நன்றாக தெரியும் என்று குறிப்பிட்ட ஸ்டாலின், தமிழக விவசாயிகளின் நலன் காக்க அனைத்துக் கட்சி சார்பில் நிறைவேற்றி தீர்மான எடுத்து சொல்ல பிரதமர் தமக்கு நேரம் ஒதுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+