திராவிட இயக்கம் பழுத்த மரம்.... எத்தனை கற்களை வீசினாலும் அது தாங்கும்!- ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திராவிட இயக்கம் என்பது பழுத்த மரம். அதன் மீது எத்தனை கற்களை வீசினாலும் தாங்கும் என்று திமுக பொருளாளர் முக ஸ்டாலின் கூறினார்.

திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி தலைமையில் திருச்சி சிறுகனூரில் நடந்த சமூக நீதி மாநாட்டில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

MK Stalin advocates for Dravidian moment

அவரது பேச்சிலிருந்து...

நேற்றும் இன்றும் இரு தினங்களாக நடைபெற்றுக் கொண்டு இருக்கக்கூடிய இந்த சமூக நீதி மாநாட்டில் உங்களுடன் பங்கேற்று, தலைவர் கலைஞர் பங்கேற்று உரையாற்ற வேண்டிய நிலையில், தன்னுடைய உடல் நலம் கருதி, மருத்துவர்கள் கட்டாயப்படுத்தியதன் அடிப்படையில், அவர் வருவதற்கான வாய்ப்பைப் பெற முடியாத நிலையில், வாழ்த்துச் செய்தியை என் மூலமாக அனுப்பி, எனது உரையை தொடங்குவதற்கு முன்பாக அது உங்களிடத்திலே வாசிக்கப்பட்டு இருக்கிறது.

ஆக இந்த நிலையில் நம் பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்கள் என்னை அறிமுகப்படுத்தி, உரையாற்றுவதற்கு பணித்த நேரத்தில் என்னை இன்னும் ஊக்கப்படுத்தும் வகையில், உற்சாகப்படுத்தும் வகையில் என்னை அடையாளம் காட்டியிருக்கிறார்.

எனக்கு இன்றைக்கு நினைவுக்கு வருவது, திராவிட இயக்கத்தின் தலைமகனான விளங்கிய டாக்டர் நடேசனார் அவர்கள் விடுத்த அழைப்புதான். 1914-ல் திராவிட சங்கத்தின் முதலாமாண்டு நிறைவு விழாவில், சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் தான் முழக்கமிட்டார்.

"விழியுங்கள், எழுங்கள். இன்றேல் என்றும் நீவிர் வீழ்ந்து பட்டோர்" என்று அன்றைக்கு அவர் முழங்கினார். இந்த முழக்கம், தமிழர்களுக்காக, அதுவும் தமிழக இளைஞர்களுக்காக அன்றைக்கு நடேசனார் அவர்கள் முழங்கினார்.

அதைத் தொடர்ந்து தந்தை பெரியார் அவர்கள் முழங்கினார். அந்த முழக்கத்தின் தொடர்ச்சியாக இந்த சமூக நீதி மாநாட்டைக் கூட்டி நம்முடைய ஆசிரியர் முழங்குவதற்காக இந்த மாநாட்டை கூட்டியிருக்கிறார் என்பதுதான் உண்மை. அந்த ஆசிரியரின் சொல்லைத் தட்டாத மாணவர்களாக இங்கே நாமெல்லாம் வந்து குழுமியிருக்கிறோம். அதுதான் இந்த மாநாட்டினுடைய சிறப்பு.

ஆனால் இதே திராவிட இயக்கத்தை சிலர் கிண்டல் செய்கின்ற, கேலி செய்கின்ற, கொச்சைப்படுத்துகின்ற, கொக்கரித்துக் கொண்டு இருக்கக்கூடிய, இந்த இயக்கத்தைப் பற்றி விமர்சிக்கக் கூடிய நிலையை இன்றைக்கு நாம் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியாது.

தமிழகத்திற்கு திராவிட இயக்கம் தேவையில்லை என்று இன்றைக்குப் புலம்பிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், இந்த திராவிட இயக்கத்தில் இருந்து பதவிகளை அனுபவித்து விட்டு, தங்கள் பிள்ளைகளை டாக்டர்களாக, எஞ்சினியர்களாக ஆக்கியவர்களும் இன்றைக்கு இந்த திராவிட இயக்கம் வேண்டாம் என்று புலம்புகிறார்கள் என்று சொன்னால், திராவிட இயக்கம் என்பது பழுத்த மரம். இதன் மீது எத்தனை கற்கள் வீசினாலும் அது தாங்கும்.

சுயமரியாதையையும், சமூக நீதியையும் நிலைநாட்டுவதில் தி.க.வும் தி.மு.க.வும் வேறு வேறல்ல. நான் இன்னும் சொல்கிறேன், 'ஒரு இயக்கம் கருப்பு சட்டை அணிந்து கடவுளை மற', என்கிறது. இன்னொரு இயக்கம், 'வெள்ளை வேட்டி-சட்டை அணிந்து மனிதனை நினை', என்கிறது, இதுதான் உண்மை. ஆக, இங்கே எல்லாரும் சொன்னதுபோல, இரட்டைக் குழல் துப்பாக்கியாக நாம் களத்தில் இறங்கத் தயாராக இருக்கிறோம்.

விரைவில் தேர்தலையும் சந்திக்கவிருக்கிறோம். மே மாதம் அந்த தேர்தலை எதிர் நோக்கியும் காத்திருக்கிறோம். மே-19ம் தேதி. பலர் பேசுகிறபோது, "இந்த நேரத்திலும் இந்த சமூக நீதி மாநாட்டை ஆசிரியர் நடத்துகிறாரே", என்று, அதில் ஒரு முக்கியமான காரணம் உண்டு.

பெரியாரைப் போலவே ஆசிரியர் வீரமணி அவர்களும் தொலைநோக்குப் பார்வையாளர்.

நடைபெறவிருக்கிற சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம்தான் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கப் போகிறது என்பது உண்மை. அதில் எந்த மாற்றமும் கிடையாது. அந்த தொலைநோக்குப் பார்வையுடன்தான் ஆசிரியர் அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன், நீங்கள் நிறைவேற்றித் தரவேண்டியவை என்று 25 தீர்மானங்களை இந்த மாநாட்டில் நிறைவேற்றி, முன்கூட்டியே பட்டியலிட்டு தந்திருக்கிறார். அதனால்தான் நான் முதலில் பேசியபோதே அவற்றைத் தலைப்புச் செய்திகளைப் போல சுருக்கமாகப் படித்துக் காட்டினேன். அந்த உணர்வோடுதான் இந்த சமூக நீதி மாநாட்டை நடத்தியிருக்கிறார் என்பதுதான் உண்மை.

ஆக திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறுவது உண்மை. பிறகு சமூக நீதியை நிலைநாட்டுகிற வகையிலான அந்த திட்டங்கள் நிறைவேறப் போவதும் உறுதி," என்றார் ஸ்டாலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+