சென்னை குண்டுவெடிப்பு- மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கான வாகுப் பதிவு முடிந்த கையோடு ஹாங்ஹாங்குக்கு ஓய்வெடுக்க சென்ற தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்துக்கு வந்த கவுகாத்தி விரைவு ரயிலின் இரண்டு பெட்டிகளில் குண்டு வெடித்தது என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
கொடூரமான இந்த குண்டு வெடிப்பில் இளம்பெண் ஸ்வாதி கொல்லப்பட்டதும் 14-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததும் என் இதயத்தில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. குண்டு வெடிப்பில் பலியான குண்டூரைச் சேர்ந்த ஸ்வாதியின் பெற்றோருக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
படுகாயம் அடைந்தவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்வதுடன், படுகாயம் அடைந்த அனைவரும் விரைவில் சிகிச்சை பெற்று வீடு திரும்புவதற்கு அரசு துரிதமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications