இந்தியா முழுவதும் காவி நிறம் பூச மோடி அரசு முயற்சி- ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு
Recommended Video

சென்னை: மதவெறியால் மத்திய அரசு மக்களாட்சி மாண்பை குலைக்கும் செயல்களில் ஈடுபடுகிறது என்று ஸ்டாலின் கடுமையாக கண்டித்தார்.
கருணாநிதிக்கு பிறகு திமுக தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் ஸ்டாலின். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று பொதுக்குழுவில் வெளியானது.

முன்னதாக பொதுக் குழுவில் கருணாநிதி, வாஜ்பாய் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திமுக பொதுக் குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில் அப்பா இல்லாவிட்டாலும் எனது பெரியப்பா பேராசிரியர் க.அன்பழகன் உள்ளார். கருணாநிதி போல் பேச முடியாவிட்டாலும் எதையும் முயன்று பார்க்கும் துணிவு உள்ளது. தனது வாழ்நாள் முழுவதும் உழைப்பு உழைப்பு என்று மட்டுமே வாழ்வேன் என உறுதியளிக்கிறேன்.
அப்பா இல்லாவிட்டாலும் எனது பெரியப்பா பேராசிரியர் க.அன்பழகன் உள்ளார். பெரியப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவது 200 மடங்கு கடினமானது. எனது வளர்ச்சியை படிப்படியாக பார்த்தவர்கள் நீங்கள். கருணாநிதியின் மகன் என்பதைவிட தொண்டன் என்பதிலேயே மகிழ்ச்சி அடைவேன்.
புதிய வரலாறை நோக்கி தமிழகத்தையும், கழகத்தையும் அழைத்து செல்ல விரும்புகிறேன். சுயமரியாதை, சமத்துவம், சமூக நீதி, பகுத்தறிவு என்பதே திமுகவின் 4 தூண்கள் ஆகும்.
சுயமரியாதை எனும் முதுகெலும்பு இல்லாத மாநில அரசு தமிழகத்தில் உள்ளது. மதவெறியால் மத்திய அரசு மக்களாட்சி மாண்பை குலைக்கும் செயல்களில் ஈடுபடுகிறது. தமிழக மக்களின் நலன்களை கூறுபோட்டுக்கொண்டிருக்கிறது அண்ணா பெயரில் உள்ள கட்சி.
பகல் கொள்ளையடித்துக் கொண்டுள்ளாார்கள். தமிழகத்தை திருடர்கள் கையில் இருந்து விடுவிக்க வேண்டியதே நமது முதல் பணி. தமிழகத்திலுள்ள இன்றைய ஆட்சி அவலத்தில் உள்ளது.
இதை நினைக்கும்போது, நெஞ்சு பொறுக்குதில்லையே, அஞ்சி அஞ்சி சாவார் என்ற பாரதி வரி நினைவிற்கு வருகிறது. நாம் யார், நமது கொள்கைகள் என்ன, நமக்குள் இருக்கும் குறைகள், காலத்திற்கு ஏற்ப மாற வேண்டியது என்ன என்றார் மு.க.ஸ்டாலின்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications