For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சபரிமலை கோவில் தீர்ப்புக்கு, ஸ்டாலின், கனிமொழி வரவேற்பு.. வரலாற்று சிறப்புமிக்கது என புகழாரம்

Google Oneindia Tamil News

Recommended Video

    சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதி- சுப்ரீம்கோர்ட்- வீடியோ

    சென்னை: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட உரிமையுள்ளது என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், இந்த தீர்ப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

    MK Stalin, Kanimozhi welcomes Sabarimalai Temple verdict

    இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்வீட்டில், "ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம்' என்பதை நிரூபிக்கும் வகையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது" என்று கூறப்பட்டுள்ளது.

    மேலும், சமூக நீதி-பாலின சமத்துவம்-பெண் விடுதலை ஆகிய உயர்ந்த தத்துவங்களை நோக்கிய பயணத்தில் இத்தீர்ப்பு மைல்கல்! என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

    [ அமெரிக்காவில் பாக். வெளியுறவுத்துறை அமைச்சருக்கு 'நோஸ் கட்' கொடுத்த சுஷ்மா சுவராஜ்! ]

    இதேபோல "சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. குறிப்பாக,கடவுள் மனிதர்களை சமமாக படைத்தார் என்று நம்பும் பக்தர்களுக்கு இது மகிழ்வைத் தரும். பாராளுமன்றமும், சட்டமன்றங்களும்,இதை பின்பற்றி,பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவார்கள் என்று நம்புகிறேன்" என்று திமுக எம்.பி. கனிமொழி ட்வீட் செய்துள்ளார்.

    English summary
    "This is a historic judgement. And specially for all those believers who think that god created human beings & created them equally. Hope the parliament and legislative assemblies also follow this path & allow women in equal numbers" says, Kanimozhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X