ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வேல்முருகனிடம் நலம் விசாரித்தார் ஸ்டாலின்
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை சந்தித்து ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
சென்னை: சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை திமுக செயல்தலைவர் சந்தித்து நலம் விசாரித்தார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கச் சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனை, விழுப்புரம் போலீஸார் கைது செய்தனர். உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியைத் தாக்கிய வழக்கில் அவரை 15 நாட்கள் புழல் சிறையில் அடைத்தனர்.

வேல்முருகன் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புழல் சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருந்த வேல்முருகன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதத்தை நேற்று வாபஸ் வாங்கினார்.
ஆனால், நேற்று மாலை அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. இதனால் சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு இருக்கும் வேல்முருகனுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வேல்முருகனை ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications