23ஆம் தேதி ஆளுநரை சந்திக்கிறார் ஸ்டாலின்... தமிழக அரசு மீது புகார்
தமிழகத்தில் இதுவரை நடந்த ரெய்டுகளுக்கு நடவடிக்கை என்ன என்பதை முதல்வர் விளக்க வேண்டும் என்றார் ஸ்டாலின்.
சென்னை: தமிழகத்தில் இதுவரை நடந்த ரெய்டுகளுக்கு நடவடிக்கை என்ன என்பதை முதல்வர் விளக்க வேண்டும் என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் பேசுகையில், மாநில உரிமைகளை மத்தியில் உள்ள ஆட்சி பறித்து வருகிறது. நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு திமுக தார்மீக ஆதரவு அளித்துள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தமிழகத்தில் எதுவும் நடக்காதது போல் சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் பேசுகிறார்.

ரஜினி பேச்சு
தமிழகத்தில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் இது குறித்து புகார் அளிக்க வரும் 23-ஆம் தேதி ஆளுநரை சந்திக்கவுள்ளேன். 8 வழிச்சாலையை ஆதரித்து ரஜினி பேசியதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

ஒப்புக் கொண்டுள்ளார்
தமிழகம் முழுவதும் உறவினர்கள் இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் நடந்த முறைகேடுகளுக்கு ஆதாரம் உள்ளதை முதல்வர் எடப்பாடி மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

சோதனை
தமிழகம் முழுவதும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நடந்த எந்த ஒரு வருமான வரித் துறை சோதனைக்கு இதுவரை நடவடிக்கை இல்லை. தமிழகத்துக்கு எதிரான மத்தியஅரசின் செயல்களால் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளோம்.

மத்திய அரசு விளக்கம்
கார்களிலேயே பணமும்,தங்கமும் தமிழகத்தை சுற்றிவரும் நிலை இருக்கிறது.எந்த பிரச்சினைக்கும் முதல்வர் முறையாக பதில் தருவதில்லை. வருமானவரி சோதனை உள்நோக்கத்துடன் நடைபெறுகிறதா என மத்தியஅரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றார் ஸ்டாலின்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications