இறந்ததாக கூறி வாக்காளர்பட்டியலில் பெயர் நீக்கப்பட்டவர்கள்.. மேடையில் ஏற்றி குட்டை உடைத்த ஸ்டாலின்
கடலூர் : வாக்காளர் பட்டியலில் தி.மு.க. வினரின் பெயர்கள் திட்டமிட்டே நீக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய மு.க.ஸ்டாலின், அவ்வாறு நீக்கப்பட்டவர்களையும் மேடையேற்றி மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
கடலூர் புதுச்சத்திரம் மைதானத்தில் நீதி கேட்கும் பேரணியை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் துவக்கிவைத்தார். இந்த பேரணிக்கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
மு.க.ஸ்டாலின் தனது உரையில் கூறியதாவது..

தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் சொல்லமுடியாத துயரத்தில் இருக்கிறார்கள். இடைத்தேர்தலில் வாக்குகளை விலைக்கு வாங்கி பெற்றி பெற்ற ஆணவத்தில் அதிமுக. திளைக்கிறது. பொதுத்தேர்தலிலும் வாக்குகளை வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் உள்ள அதிமுகவிற்கு இடம் தரக்கூடாது.
சட்டசபை தேர்தல், நடாளுமன்ற தேர்தல் முடிந்துள்ளது. பிரவீன்குமார் ஆணையராக இருந்தார். இவர் அக்கிரமத்திற்கு துணை நின்றார். இப்போது சந்தீப் சக்சேனா, பிரவீன் குமாரை தோற்கடிக்கும் அவர் அக்கிரமத்திற்கு துணை போய் இருக்கிறார்.
சமீபத்திய இடைத்தேர்தலில் ஓட்டுக்கள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளன. தொகுதியில் தொடர்பு இல்லாதவர்கள் கள்ள ஓட்டு போட்டனர். நான் கலைஞர் மகன். எதையும் ஆதாரம் இல்லாமல் பேச மாட்டேன்.
மாவட்டம்தோறும் உயிருடன் இருக்கும் ஆயிரக்கணக்கான தி.மு.க.வினரின் பெயர்களை இறந்ததாகக் கூறி திட்டமிட்டே வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுபற்றி விசாரணை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது
இவ்வாறு குற்றம்சாட்டிய மு.க.ஸ்டாலின், பூவிருந்தவல்லி தொகுதியில் இறந்ததாக கூறி நீக்கப்பட்ட 4 பேரை மேடையில் ஏற்றி அறிமுகம் செய்துவைத்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications