புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரியார் சிலை உடைப்பு.. ஸ்டாலின் கடும் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பெரியார் சிலை உடைப்புக்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார்.
ராமராஜ்ஜியம் ரத யாத்திரைக்கு கண்டனம் தெரிவித்து ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன்பிறகு, ஸ்டாலினை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.அப்போது அவர் அளித்த பேட்டி:

காட்டுமிராண்டிகளை தண்டிக்கும் வரை திமுக ஓயாது . பெரியார் சிலைகளுக்குப் பாதுகாப்பு தேவை. சிலைகளை சிதைத்து பெரியார் மண் என்ற பெருமையை சிதறடிக்க முடியாது. திமுக தொடர் போராட்டங்களை முன்னெடுக்க தயாராகிவிட்டது என்றார் ஸ்டாலின்.
செங்கோட்டையில் ரதயாத்திரை நுழைந்த நிலையில், பெரியார் சிலை உடைக்கப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications