சேலம் கட்சராயன்குட்டை ஏரியை ஸ்டாலின் ஆக. 31-ந் தேதி பார்வையிடுகிறார்
சர்ச்சைக்குரிய சேலம் கட்சராயன்குட்டை ஏரியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வரும் 31-ந் தேதி பார்வையிடுகிறார்.
சேலம்: திமுகவினர் தூர்வாரிய சேலம் கட்சராயன் ஏரியை அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 31-ந் தேதி பார்வையிட உள்ளார்.
தமிழகம் முழுவதும் திமுகவினர் நீர்நிலைகளை தூர் வாரி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் முதல்வர் பழனிச்சாமியின் தொகுதியான எடப்பாடியில் உள்ள கட்சராயன் ஏரியையும் திமுகவினர் தூர் வாரினர்.

ஸ்டாலின் கைது
இந்த ஏரியை கடந்த ஜூலை மாதம் 27-ந் தேதி ஸ்டாலின் பார்வையிட சென்றார். ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என கூறி கோவை புறநகரில் ஸ்டாலின் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டார்.

பொதுமக்கள் தடுத்து நிறுத்தம்
அப்போது அதிமுகவினர் மீண்டும் இந்த ஏரியை தூர் வாருவதாக இறங்கினர். ஆனால் பொதுமக்கள் அவர்களை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின் ஏரியை பார்வையிட அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, ஸ்டாலின் ஏரியை பார்வையிட செல்வது அரசுக்கு கவுரவ பிரச்சனையா? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

ஆக.31-ல் பார்வையிடுகிறார்
அத்துடன் ஏரியை ஸ்டாலின் பார்வையிடலாம் என்றும் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து வரும் 31-ந் தேதி கட்சராயன் ஏரியை ஸ்டாலின் பார்வையிட உல்ளார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications