புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பைக்கில் சென்று பார்வையிட்ட ஸ்டாலின்
சென்னை: வர்தா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை பைக்கில் சென்று பார்வையிட்டார் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின்.
வர்தா புயலால் சென்னை அலங்கோலமாகிவிட்டது. புயல் கரையை கடந்தபோது சென்னையில் கனமழை பெய்ததுடன், பேய்க்காற்று வீசி மக்களை அச்சத்தில் ஆழ்த்திவிட்டது.

சீரமைப்பு பணிகளை அரசு துரிதப்படுத்தியுள்ளது. இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை பைக்கில் சென்று பார்வையிட்டார் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின்.
இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்க்ததில் கூறியிருப்பதாவது,
வர்தா புயல் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களை தாக்கி பொதுமக்களுக்கு ஒரு கடுமையான பாதிப்பை உண்டாக்கி சென்றிருக்கிறது. சென்னை மாநகரமே முழுமையாக முடங்கி இருக்கின்ற நிலையில் கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டிருக்கக் கூடிய பாதிப்புகளை நேரில் பார்வையிட்டேன்.
சாலைகளில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தவும், சாய்ந்த மின் கம்பங்களை சீரமைக்கவும் அரசுத்துறைகள் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் கழக நிர்வாகிகள், முன்னோடிகள், செயல்வீரர்கள் அனைவரும் அவர்களுக்கு பக்கபலமாகவும், உறுதுணையாகவும் இருந்து அவர்களுக்கு உதவிட வேண்டும் என்று நான் ஏற்கனவே திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் விடுத்த வேண்டுகோளை ஏற்று கழகத் தோழர்கள் கடமையாற்றி வருவதையும் கேட்டறிந்தேன்.
புயலாலும் நேற்று பெய்துள்ள மழையின் காரணமாகவும் தொற்று நோய்கள் பரவக்கூடிய நிலை உருவாகும் என்பதால், அதனை முன்கூட்டியே தடுக்கின்ற முயற்சியில் அரசும், மாநகராட்சியும் உடனடியாக தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம்களை அமைக்கவும், குடிநீர், பால் உள்ளிட்ட மக்களின் அத்தியாவசியத் தேவைகள் தட்டுப்பாடின்றி கிடைக்க உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளையும் கேட்டு கொண்டேன்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications