ஒ.பன்னீர் செல்வத்திற்கு இத்தனை முக்கியத்துவம் ஏன்? கேட்கிறார் கலைச்செல்வன்
கட்சிக்கு துரோகம் செய்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு இத்தனை முக்கியத்துவம் தருவது ஏன் என்று எம்எல்ஏ கலைச்செல்வன் கேட்டுள்ளார்.
சென்னை: டிடிவி தினகரனை விருத்தாச்சலம் எம்எல்ஏ கலைச்செல்வன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர், சின்னத்தை முடக்க காரணமான பன்னீர்செல்வத்தை துணை முதல்வராக்கியது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
டிடிவி தினகரனுக்கு வெளிப்படையாக 19 பேர் எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்து விட்டு புதுச்சேரியில் உள்ள ஹோட்டலில் தங்கியுள்ளனர். அவர்களின் கேள்வி எல்லாம், ஓ.பன்னீர் செல்வத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது ஏன் என்பதுதான்.

விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ கலைச்செல்வன் தினகரன் வீட்டில் அவரைச் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். இதன் மூலம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய கலைச்செல்வன், 122 எம்எல்ஏக்களில் ஒருவரை துணை முதல்வராக்காமல், சின்னத்தை முடக்க காரணமான பன்னீர்செல்வத்தை துணை முதல்வராக்கியது ஏன்? என்றார்.என்னை போன்று மனக்குமுறலுடன் பல எம்எல்ஏக்கள் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்சிக்கும், ஆட்சிக்கும் துரோகம் இழைத்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை ஏற்க முடியாது என்றும் கலைச்செல்வன் கூறியுள்ளார். கலைச்செல்வன் மட்டுமல்ல தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரின் கேள்வியும் இதுவாகத்தான் உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications