நான் லொடுக்கு பாண்டிதான்.. வார்த்தையை அளந்து பேசுங்கள்.. பொறிந்து தள்ளிய கருணாஸ்!
நான் லொடுக்கு பாண்டிதான், கஷ்டப்பட்டுதான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன் என அமைச்சர் ஜெயக்குமாருக்கு எம்எல்ஏ கருணாஸ் ஆக்ரோஷமாக பதிலளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: நான் லொடுக்கு பாண்டிதான், கஷ்டப்பட்டுதான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன் என அமைச்சர் ஜெயக்குமாருக்கு எம்எல்ஏ கருணாஸ் ஆக்ரோஷமாக பதிலளித்துள்ளார்.
எம்எல்ஏ கருணாஸ் கடந்த 16 ஆம் தேதி சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அவதூறாக பேசினார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த நுங்கம்பாக்கம் காவல்துறையினர் அவரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் நீதிமன்றம் போலீசாரின் மனுவை ஏற்க மறுத்துவிட்டனர். இதைத்தொடர்ந்து ஐபிஎல் தொடர்பாக கருணாஸ் மீது இரவோடு இரவாக இரண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் கருணாஸ்க்கு 7 நாள் ஜெயில் விதிக்கப்பட்ட நிலையில் முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் கருணாஸுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்.
[கருணாசை லேசுல நினைத்துவிடாதீர்கள்.. செம பிளான்ல இருக்காரு!]

ஆக்ரோஷ பதில்
இந்நிலையில் எம்எல்ஏ கருணாஸை டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ ரத்தினசபாபதி இன்று சந்தித்தார். இதைத்தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கருணாஸ் மிக ஆக்ரோஷமாக அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிமுக அரசுக்கு பதிலடி கொடுத்தார்.

நான் லொடுக்கு பாண்டிதான்
அவர் பேசியதாவது, நான் லொடுக்கு பாண்டிதான். நான் கஷ்டப்பட்டுதான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்.நான் கீழே இருந்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். ஒரு அமைப்பை தொடங்கி எம்எல்ஏவாக வந்துள்ளேன்

ஓபிஎஸ், ஈபிஎஸ் மீது..
நேற்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக எத்தனை பேனர்கள் வைத்திருந்தனர்? அனுமதி பெற்றா பேனர் வைத்திருந்தார்கள் ? இதற்காக காவல்துறையினர் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் மீது வழக்கு போடுங்கள்.

எளியவனுக்கு ஒரு சட்டமா?
கண்டிக்கிறோம் என நாங்கள் போஸ்டர் ஒட்டினால் உடனே வழக்குப்போடுகிறார்கள். வலியவனுக்கு ஒரு சட்டம், எளியவனுக்கு ஒரு சட்டமா?

மக்கள் சிரிக்கிறார்கள்
நீதிமன்றம் உங்களை கவனித்துக் கொண்டுதான் உள்ளது. நீதித்துறை உங்களுக்கு சரியான நேரத்தில் தக்க பாடம் புகட்டும். நாங்கள் நீதித்துறையை மதிப்பவர்கள். தமிழக மக்கள் உங்களை பார்த்து சிரிக்கிறார்கள்.

மக்கள் கவனிக்கிறார்கள்
ஜெயலலிதா இருந்த போது எப்படி இருந்தவர்கள், இப்போது எப்படி பேசுகிறார்கள், நடந்துகொள்கிறார்கள் என மக்கள் கவனிக்கிறார்கள்.

வார்த்தையை அளந்து பேசுங்கள்
முக்குலத்தோர் புலிப்படையினரை கையை உடைப்பேன் காலை உடைப்பேன் என மிரட்டினால் சும்மா இருக்க மாட்டோம். நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுப்பேன். வார்த்தையை அளந்து பேசுங்கள்.

அரசியல்வாதி அல்ல
நான் போராளி, அரசியல்வாதி அல்ல. சமுதாயப் போராளி நான். இன்று சிவாஜி கணேசன் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. சிவாஜிகணேசன் சிலையை சென்னையில் முக்கிய வீதியில் நிறுவ வேண்டும். இவ்வாறு கருணாஸ் எம்எல்ஏ ஆக்ரோஷமாக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசினார்.












Click it and Unblock the Notifications