உளுந்தூர்பேட்டையில் மனித நேய மக்கள் கட்சி போட்டியில்லை: ஜவாஹிருல்லா அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சி உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடவில்லை என அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார்.

மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் இன்று சந்தித்து பேசினர். அப்போது அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் உடனிருந்தனர்.

MMK not contest in ulundurpet constituency

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜவாஹிருல்லா கூறியதாவது: தி.மு.க, கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அதில் உளுந்தூர்பேட்டை தொகுதியும் ஒன்று.

தற்போது 5 தொகுதிகளுக்கு பதிலாக நான்கு தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவது எனவும், உளுந்தூர்பேட்டை தொகுதியி்ல போட்டியிடுவதில் இருந்து மனித நேய மக்கள் கட்சி விலகிக் கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் பி்ன்னர் அறிவிக்கப்படும். உளுந்தூர்பேட்டை தொகுதியை மீண்டும் திமுகவிற்கு வழங்குவதாக அவர் அறிவித்தார்.

அப்போது மனித நேய மக்கள் கட்சி சார்பில் 4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அவர் அறிவித்தார்.

அதன் விவரம்:

ராமநாதபுரம் - ஜவாஹிருல்லா

ஆம்பூர் - நசீர் அகமது

நாகைப்பட்டினம் - ஜெபருல்லா

தொண்டாமுத்தூர் - செய்யது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+